முடியாது என்றார் மத்திய வங்கி ஆளுநர்! கோட்டாபயவின் நகர்வு ஆரம்பம் (VIDEO)
மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தற்போது பெயரை காப்பாற்ற வேண்டிய நிலையில் உள்ளமையினால் உடனடியாக அரசாங்கமொன்று அமைக்காத பட்சத்தில் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக அறிவித்துள்ளதாக கொழும்பு பல்கலைகழகத்தின் பொருளியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இவை உள்ளிட்ட இன்னும் பல விடயங்களை உள்ளடக்கி வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,
மத்திய வங்கியின் ஆளுநர் பதவியினை பொறுப்பேற்ற சூழ்நிலையிலிருந்து பார்க்கையில் நாட்டில் தற்போது நிதியமைச்சர் இல்லாத காரணத்தினால் உடனடியாக முடிவினை எடுக்கக்கூடிய நிலையில்,மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தற்போது உள்ளார்.
மேலும், நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு அவர் காரணமென திரிபுப்படுத்தி விடக்கூடிய நிலை காணப்படுவதனால் தனது பெயரை காப்பாற்ற வேண்டிய நிலையில் அவர் உள்ளமையினால், உடனடியாக ஊடக சந்திப்பொன்றினை நடத்தி நாட்டின் நெருக்கடி நிலை தொடர்பில் விளக்கமளித்துள்ளார்.
மேலும் உறுதியான அரசாங்கமொன்று தேவையென்றும் அதனை உடனடியாக நியமிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளதுடன், அவ்வாறு அமையாத பட்சத்தில் தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
இதற்கு எதிர்வினையாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா அவசரப்பட வேண்டாமென்றும் தாங்கள் 24 மணி நேரத்தில் அவதானமாக செயற்பட்டு நல்லதொரு முடிவினை மேற்கொள்ளலாம் என்றும் உறுதியளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam