கிழக்கை ஆள செந்தில் தொண்டமான் யார்: அமைச்சர் நஸீர் சீற்றம் - செய்திகளின் தொகுப்பு
கிழக்கு மாகாணம் செந்தில் தொண்டமானின் அப்பாவின் சொத்தல்ல என்றும் கிழக்கு மாகாணத்தைக் கையாள செந்தில் தொண்டமான் யார் எனவும் அமைச்சர் நஸீர் அஹமட் கேள்வி எழுப்பியுள்ளார்.
இப்படி செயற்பட்டால் இங்கு இறங்கவிடக்கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
காத்தான்குடி பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இடம்பெற்றபோது காத்தான்குடி கோட்டக் கல்வி அதிகாரியின் இடமாற்றம் தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்டது.
கோட்டக் கல்வி அதிகாரியாக இருந்த எம்.எம்.ஹலாவுதீனின் இடமாற்றம் பிழையானது எனவும், அது நிறுத்தப்படல் வேண்டும் எனவும் இங்குத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அங்கு பேசும்போதே அமைச்சர் காரசாரமாகக் கிழக்கு மாகாண ஆளுநரை விமர்சித்துள்ளார்.
இது தொடர்பிலான செய்திகளையும் மேலும் பல செய்திகளையும் உள்ளடக்கி வருகிறது இன்றைய நாளுக்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |