மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தால் பிரச்சினைகள் தீர்ந்து விடும் - வடக்கு மாகாண ஆளுநர்
மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தால் பல பிரச்சினைகள் தீர்ந்து விடும் என வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
மேலும், மாற்றுத்திறனாளிகள் தொடர்பில் அரச திணைக்களங்கள் கூடுதல் கவனம் செலுத்தப்படவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மனித உரிமைகள் தின நிகழ்வில் நேற்று(12) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கூடுதல் கரிசனை
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
“மனித உரிமைகள் மதிக்கப்படவேண்டும். அதன் ஊடாகத்தான் அதனை நிலைநாட்ட முடியும். பொலிஸார் சில இடங்களில் முறைப்பாடுகளை செய்யச் செல்லும் பொதுமக்களின் முறைப்பாடுகளை ஏற்பதில்லை என எமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுகின்றன.
இத்தகைய பாரபட்சங்கள் இல்லாதொழிக்கப்படுவது மனித உரிமைகளை நிலைநாட்ட உதவும். எமது சமூகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டும்.
எமது அரச அலுவலகங்களை அவர்கள் இலகுவாக அணுகுவதற்கான வழிகள் ஏற்படுத்தப்படவேண்டும். யாழ். மாவட்டச் செயலராக இருந்தபோது மாற்றுத் திறனாளிகள் அணுகுவதற்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்திருந்தேன்.
மாற்றுத்திறனாளிகள் தொடர்பில் கூடுதல் கரிசனையுடன் நாம் செயற்படவேண்டும்” என்றார்.
அதிகளவான முறைப்பாடுகள்
இந்த நிகழ்வில், மாற்றுத்திறனாளிகள் ஆட்சேர்ப்புக்கான வழிகாட்டுதல் பரிந்துரைகள் அடங்கிய ஆவணம், ஆளுநரிடம் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளரால் கையளிக்கப்பட்டது.
இங்கு தலைமையுரையாற்றிய பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ், கைதுகளின் போதான சித்திரவதை தொடர்பிலும், அரச நிறுவனங்களில் இடம்பெறும் பாரபட்சம் தொடர்பிலுமே அதிகளவான முறைப்பாடுகள் தமக்குக் கிடைக்கப்பெறுவதாகக் குறிப்பிட்டார்.
அத்துடன் அரச நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான அணுகுதலுக்குரிய வசதிகள் போதுமானளவில் இல்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், வடக்கு மாகாணத்தின் தற்போதைய ஆளுநர் நா.வேதநாயகன், வடக்கின் 4 மாவட்டங்களில் மாவட்டச் செயலராக இருந்தவர். அவருக்கு இந்த மாகாணத்தின் உட்கட்டமைப்பு பிரச்சினைகள் நன்கு தெரியும். நிர்வாகத் தொய்வும் தெரியும். அப்படியான ஒருவரிடம் எமது கோரிக்கைகளை முன்வைப்பது தீர்ப்பதற்கு இலகுவானதாக இருக்கும் எனவும் குறிப்பிட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


நல்லூர் கந்தசுவாமி கோவில் சந்தான கோபாலர் உற்சவம் & பட்டித்திருவிழா





மாதனமுத்தாக்களின் சோம்பேறிப் போராட்டமும் ஈழத் தமிழ் அரசியலும் 26 நிமிடங்கள் முன்

டிரம்ப் தோற்கவில்லை.,ஆனால் இது புடினின் தெளிவான வெற்றி…! அமெரிக்க அதிகாரிகளின் சர்ச்சை கருத்து News Lankasri

உக்ரைனில் பொதுமக்கள் கொல்லப்படுவதை நிறுத்துவது எப்போது? பத்திரிகையாளர் கேள்விக்கு புடினின் செய்கை News Lankasri

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan

ஓவர்சீஸில் தாறுமாறு வசூல் வேட்டை செய்துள்ள நடிகர் ரஜினியின் கூலி... அதிகாரப்பூர்வமாக வந்த தகவல் Cineulagam
