இலங்கையின் 5 இலட்சம் அரச ஊழியர்கள் குறித்து வெளியாகியுள்ள தகவல்! விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் சம்பள அதிகரிப்பு சாத்தியமில்லை என்றால் இடைக்கால கொடுப்பனவை வழங்குமாறு அரச ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கமைய, சுமார் ஐந்து இலட்சம் அரச ஊழியர்கள் கையெழுத்திட்ட மனுவுடன் அரசிடம் கோரிக்கையொன்றினை முன்வைக்க அரசு ஊழியர் சங்கங்களின் ஒன்றியம் முடிவு செய்துள்ளது.
வாழ்க்கை செலவு
நாட்டில் தற்போது பணவீக்கம் வேகமாக உயர்ந்துள்ளதுடன், பெறப்படும் சம்பளம் வாழ்க்கைச் செலவுக்கு போதுமானதாக இல்லை என அச்சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதில் அரசாங்கம் அதிக அக்கறை காட்டவில்லை என சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
உதாரணமாக, உலக சந்தையில் எரிபொருள் விலை மேலும் குறைய வாய்ப்புள்ள போதிலும் அரசாங்கம் அவ்வாறு செய்யாது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளதாகவும் அந்த சங்கத்தின் தேசிய அமைப்பாளர் பிரதீப் பஸ்நாயக்க தெரிவித்துள்ளார்.