அரச அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பிறப்பித்துள்ள கடுமையான உத்தரவு
கடன் அடிப்படையில் அரச நிறுவனங்களுக்கு பொருட்கள் மற்றும் சேவைகளை கொள்வனவு செய்வதை தவிர்க்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அனைத்து அரச அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனை மீறும் அரச அதிகாரிகள் அதற்கான செலவுகளை தனிப்பட்ட முறையில் செலுத்த வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார நெருக்கடி
இதேவேளை, நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனவரி மாதத்திற்கான அரசாங்கத்தின் வருமானம் மற்றும் செலவுக்கான மதிப்பீட்டை ஜனாதிபதி சமர்ப்பித்ததாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போதைய பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு அனைத்து அரச நிறுவனங்களிலும் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கை இந்த நாட்களில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.