அரச ஊழியர்களின் சம்பள குறைப்பு! நாடாளுமன்றில் இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பு

Parliament of Sri Lanka Government Employee Sri Lanka President of Sri lanka
By Mayuri Oct 04, 2022 11:57 AM GMT
Report

அரச ஊழியர்களுக்கான சம்பள குறைப்பு தொடர்பில் நாடாளுமன்றில் இன்றைய தினம் அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி அரச ஊழியர்களுக்கான சம்பளத்தை குறைக்க அரசாங்கம் ஒருபோதும் நடவடிக்கை எடுக்காது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், வேதன குறைப்பு தொடர்பில் வெளியாகும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை. அரச ஊழியர்களுக்கான வேதனம் மற்றும் ஓய்வூதியம் என்பவற்றுக்காக அரசாங்கம் மாதாந்தம் 119 பில்லியன் ரூபாவை அரசாங்கம் செலவிடுகிறது.


இதில் ஊழியர்களின் வேதனத்துக்காக 93 பில்லியன் ரூபாவும், ஓய்வூதியத்துக்கு 26 பில்லியன் ரூபாவும் செலவிடப்படுகிறது. வருடாந்தம் 1428 பில்லியன் ரூபா அரச ஊழியர்களின் சம்பளம் மற்று ஓய்வூதியத்துக்காக ஒதுக்கப்படுகிறது.

அதிகரித்துவரும், பணவீக்கத்துக்கு மத்தியில் ஏனையோரை போலவே அரச ஊழியர்களும் கடும் அழுத்தத்துக்கு உள்ளாகி வருகின்றனர். அவர்களின் சம்பளங்களை குறைத்து, அவர்களை மேலும் அழுத்தத்துக்கு உள்ளாக்க அரசாங்கம் ஒருபோதும் நடவடிக்கை எடுக்காது.

எனவே, அரச ஊழியர்களின் பணியை உறுதிப்படுத்துவதற்காக அரசாங்கத்தின் மீண்டெழும் செலவுகளில் அரச ஊழியர்களுக்கான வேதனம் மற்றும் ஓய்வூதியம் என்பன அத்தியாவசியமானது எனக் கருத்திற்கொள்ளப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

முதலாம் இணைப்பு

அரச நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வு வயது தொடர்பான அனுமதியொன்றை அமைச்சரவை வழங்கியுள்ளது.

வழங்கப்பட்டுள்ள அனுமதி

அதன்படி அரச ஊழியர்களின் கட்டாய ஓய்வூதிய வயதை 60ஆக மாற்ற அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நாடாளுமன்றத்தில் 2022 இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் உத்தேச அரச நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் கட்டாய ஓய்வு வயது 60ஆக மாற்றியமைக்கும் முன்மொழிவொன்று முன்வைக்கப்பட்டிருந்தது.

அரச ஊழியர்களின் சம்பள குறைப்பு! நாடாளுமன்றில் இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பு | Government Worker Sri Lanka Pension Public Servant

இதன்படி, 2023ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ஏற்பாடுகளை வகுத்து அதற்கான சுற்றறிக்கை அறிவுறுத்தல்களை வழங்குவதற்கு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பொது நிர்வாக அமைச்சின் தகவல்

அரச ஊழியர்களுக்கு 60 வயதில் ஓய்வு வழங்குவது தொடர்பான திருத்தங்கள் அமைச்சரவை கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளதாக பொது நிர்வாக அமைச்சு ஏற்கனவே தெரிவித்திருந்தது.

அரச ஊழியர்களின் சம்பள குறைப்பு! நாடாளுமன்றில் இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பு | Government Worker Sri Lanka Pension Public Servant

அரச ஊழியர்களுக்கு 60 வயதில் ஓய்வு வழங்குவது தொடர்பான திருத்தங்கள் அடங்கிய அமைச்சரவை பத்திரம் அமைச்சரவை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. 

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US