மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைத்தால் நாட்டை முடக்க அரசாங்கம் தயங்கப்போவதில்லை!
மருத்துவ நிபுணர்களின் பரிந்துரைகளின் படி அரசாங்கம், எப்போதும் கோவிட் தொடர்பான முடிவை எடுத்து வருகிறது.
இந்த நிலையில், மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைத்தால் நாட்டை முடக்கத் தயங்கப்போவதில்லை என்று ராஜாங்க அமைச்சர் சன்ன ஜெயசுமன தெரிவித்துள்ளார்.
இருப்பினும், மருத்துவ நிபுணர்கள் இப்போது வரை, நாடு முடக்கலுக்குச் செல்ல பரிந்துரை செய்யவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மருத்துவ சங்கம் மற்றும் மருத்துவ நிபுணர்கள் சங்கம் உட்பட பல மருத்துவ வல்லுநர்கள், கோவிட் நிலைமை மேலும் அதிகரிப்பதைத் தடுக்க கடுமையான கட்டுப்பாடுகள் அல்லது ஊரடங்கு உத்தரவுகளை விதிக்குமாறு பல சமயங்களில் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர்.
ஊரடங்கு அல்லது கடுமையான கட்டுப்பாடுகளுக்கு செல்ல வேண்டியதன் அவசியம் குறித்து அவர்கள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எழுத்துப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
இந்தநிலையில், அரசாங்கம், மருத்துவ நிறுவனங்கள் மற்றும் சுகாதார நிபுணர்களால் அதிகாரப்பூர்வமாக முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை அமுல்படுத்த கடமைப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் அரசியல் சக்திகளுக்கு சார்பாக செயற்படும் தனி ஆட்களே முடக்கலுக்கு செல்ல பரிந்துரைகளை வெளியிடுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
முடக்கலுக்கு செல்ல வேண்டுமானால், நாளாந்த வருமானம் பெறுபவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும் ஒரு அமைப்பு இருக்க வேண்டும் என்றும் ராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

மீனாவிற்கு பிரச்சனை கொடுக்க நினைத்து வம்பில் சிக்கிய ரோஹினி, இது தேவையா?.. சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam

வெறித்தனமான போஸ்டர்.. வெற்றிமாறன் - சிம்பு படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு Cineulagam
