லாஃப் எரிவாயு நிறுவனத்தை பகிரங்கமாக எச்சரித்த அரசாங்கம்
சமையல் எரிவாயுவை இறக்குமதி செய்து நுகர்வோருக்கு வழங்குவதற்கு லாஃப் எரிவாயு நிறுவனம் தலையிடத் தவறினால் அரசாங்கம், உரிய தீர்மானத்தை எடுக்கும் என வர்த்தக, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க எச்சரித்துள்ளார்.
அதேநேரம், லிட்ரோ கேஸ் மூலம் வழங்கப்படும் சமையல் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு இல்லை என அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் லிட்ரோ மற்றும் லாஃப் ஆகிய இரண்டு சமையல் எரிவாயு நிறுவனங்கள் செயற்படுகின்றன. லிட்ரோ எரிவாயுவிற்கு தற்போது தட்டுப்பாடு இல்லாதபோது, லாஃப் எரிவாயுவுக்கு சந்தையில் பற்றாக்குறை ஏற்பட்டதற்கான காரணங்களை அந்த நிறுவனம் விளக்க வேண்டும்.
அரசு முடிவெடுக்கும்
இந்தநிலையில், லாஃப் நிறுவனம், எரிவாயுவை இறக்குமதி செய்து வழங்குவதில் தலையிடத் தவறினால், அரசாங்கம் ஒரு முடிவை எடுக்க வேண்டியேற்படும்.
லிட்ரோ எரிவாயு கையிருப்பு போதுமானதாக இருப்பதால், லாப் எரிவாயு நுகர்வோர் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு தீர்வு காண எரிவாயு கொள்கலன்களை மாற்ற வேண்டும் என்றால், அது குறித்து அரசு விரைவில் முடிவெடுக்கும் என்றும் அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |