திடீர் எரிபொருள் நெருக்கடி! அரச வாகனங்கள் குறித்து எடுக்கப்பட்டுள்ள அவசர தீர்மானம்
எரிபொருளை சிக்கனப்படுத்துவதற்காக அமைச்சர்களது வாகனங்களின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அரச சேவையாளர்களின் எரிபொருள் பயன்பாடு
அரச சேவையாளர்களின் எரிபொருள் பயன்பாட்டை குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கான சுற்றுநிரூபத்தை அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் வெளியிட்டுள்ளார்.

அதற்கமைய செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு அரச அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இதன்படி, அத்தியாவசிய சேவைகள் ஆணையர் நாயகம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களில் அரச வாகனங்களைப் பயன்படுத்தும் போது எரிபொருளை எவ்வாறு சேமிப்பது என்பது குறித்து விவரிக்கப்பட்டுள்ளன.
அரச சேவையில், தற்போது 92,000 வாகனங்கள் இயங்கும் நிலையில் உள்ளதாகவும், அந்த வாகனங்கள் ஒவ்வொன்றும் ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் ஒரு லிட்டர் எரிபொருளைச் சேமித்தால், ஒரு நாளைக்கு மொத்தம் 92,000 லிட்டர் எரிபொருளைச் சேமிக்க முடியும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்க தாக்குதலில் இருந்து தப்பிக்க... இரகசியமாக ஈரானுக்கு மிகப்பெரிய உதவி செய்த பாகிஸ்தான் News Lankasri