மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜனை காப்பாற்ற அநுர அரசு தீவிர நடவடிக்கை
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனை காப்பாற்ற அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் பேசிய அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
“இது தொடர்பாக சவூதி மன்னருக்கு கடிதம் அனுப்புவதற்கு மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதியின் உதவி பெறப்பட்டுள்ளது.
ராஜதந்திர நடவடிக்கை
ஜனாதிபதியின் கோரிக்கைகளை உள்ளடக்கியும், நாடாளுமன்றத்தில் உள்ள அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கையொப்பங்களுடனும் சவூதி மன்னருக்கு கடிதத்தை சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தொடரின் போது சவூதி வெளியுறவு அமைச்சரை சந்தித்து இது குறித்து விவாதிக்க வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் திட்டமிட்டுள்ளார்.
தேவையான அனைத்து இராஜதந்திர மட்டத்திலான அனைத்து நடவடிக்கைகளும் தற்போது எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நடவடிக்கைகளில் உப்புல் குமாரப்பெரும மற்றும் பைசர் முஸ்தபா ஆகியோர் இதில் இணைந்து கொண்டனர். இந்த வழியின் ஊடாகவும் நாங்கள் சவூதி மன்னரிடம் கோரிக்கையை முன்வைக்கிறோம்.
நாங்கள் எல்லா வழிகளிலும் இந்த விடயத்தை கையாண்டு வருகிறோம். இச்சம்பவம் நடந்த நாளிலிருந்தே, தேவையான இராஜதந்திர மற்றும் சட்ட நடைமுறைகளை கையாள்வதில் இலங்கை தூதரகம் தலையிட்டு வருகிறது.
இரண்டு மேன்முறையீடு
நாங்கள் மற்றொரு நாட்டின் சட்ட அமைப்பைக் கையாளுகிறோம்.

அந்த நாட்டில் இரண்டு மேன்முறையீடுகள் தாக்கல் செய்யப்பட்டன. ஒன்று இலங்கை இளைஞர் சார்பாகவும், மற்றொன்று சவூதி அரசாங்கத்தாலும் தாக்கல் செய்யப்பட்டன. அந்த இரண்டு மேன்முறையீடுகளையும் கருத்தில் கொண்ட பின்னரே தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.
நாங்கள் அவரது உயிரைக் காப்பாற்றி அவரை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வர எங்களால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம். என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
லொட்டரியில் விழுந்த ரூ.8,700 கோடி ஜாக்பாட் - ஒரு மாதம் கழித்து பரிசை வாங்கிய வெற்றியாளர் News Lankasri
இனி நாங்கதான் நார்மல்.. எல்லாரும் தப்பா புரிஞ்சிக்கிட்டாங்க: டோரதி சர்ச்சைக்கு கார்த்திக் சுப்புராஜ் பதில் Cineulagam
அட்டகத்தி தினேஷின் காதலி இவர்தானா? ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய பிரபல தொகுப்பாளினியின் பதிவு! Manithan