சமகால அநுர அரசுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் - கட்சி உறுப்பினர்களின் செயல்களால் பாதிப்பு
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் உட்பட அரசாங்க தலைவர்கள் அதிகளவில் பொய்யான தகவல்களை வெளியிடுவதாக மக்கள் மத்தியில் தோற்றம் பெற்றுள்ளது.
இந்நிலையில் இது சமகால அரசாங்கத்திற்கு பாதகமான விளைவை ஏற்படுத்தியுள்ளதாக தேசிய மக்கள் சக்தி கட்சியின் உயர்மட்டக் குழுக்களிடையே விவாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலைமையை உடனடியாக சரி செய்ய எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அரசியல்வாதிகள்
அதற்கமைய, அரசாங்கம் பொய் சொல்கிறது என்ற குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் விதமாக, கடந்த காலங்களில் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் கூறிய பொய்யான அறிக்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அவற்றை முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் அவர்களின் கருத்துக்களை வெளிப்படுத்தவும் கட்சியின் ஊடக பேச்சாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தேர்தல் வேட்பாளர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொதுக் கூட்டங்களில் போதும் ஊடகங்களுக்கு தகவல் வழங்கும் மிகவும் கவனமாக இருக்குமாறு கடுமையாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஊடக மாநாடு
சமூக ஊடகங்களில் அதிகரித்து வரும் இந்தக் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க ஏற்கனவே ஒரு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும், தேர்தலின் பின்னர் ஊடகங்கள் மற்றும் ஊடக மாநாடுகளுக்குப் புதிதாக வருபவர்களின் எண்ணிக்கையை முடிந்தவரை குறைப்பதிலும், இந்த விஷயத்தில் அனுபவமுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவை மட்டும் அனுப்புவதிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.