நிதி ஒதுக்கிவிட்டதாக அரசு சர்வதேசத்தை ஏமாற்றுகின்றது : அனந்தி சசிதரன்

Government People Kilinochchi Budget
By Sudaron Nov 21, 2021 09:24 AM GMT
Report

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது என்ற பொறுப்பு கூறலைக் கூறாமல், வெறுமனே 300 மில்லியனை ஒதுக்கிவிட்டதாக அரசு சர்வதேசத்தை ஏமாற்றுகின்றது என அனந்தி சசிதரன் சுட்டிக்காட்டுகின்றார்.

கிளிநொச்சி ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த நாட்டில் பொருளாதாரம் மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள இந்த நிலையில், வெள்ள அழிவு மற்றும் பசளை இன்மையால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்படும் நிலை காணப்படுகின்றது. அதைவிட விலைவாசி அதிகரிப்பு காரணமாக மக்கள் பொருட்களை வாங்க முடியாத நிலையில் உள்ளனர்.


அன்றாட வாழ்வியல் வாழ்க்கையில் வாழும் மக்களும் சரி, அரச உத்தியோகத்தர்களும் சரி 2 வாரங்கள்கூட வாழ்வாதாரத்தைச் சமாளிக்க முடியாத நிலையில் திணறுகின்றார்கள். ஆனால் இன்று வந்துள்ள அரசாங்கத்தின் வரவு செலவு திட்டம் என்பது வெறும் மாயையான வரவு செலவு திட்டமாக இருக்கின்றது.

எந்தவொரு சமூக நலன் சார்ந்து அல்லது, வறுமையை போக்கக்கூடிய அளவிலான வரவுசெலவு திட்டமாக இது அமைந்திருக்கவில்லை. கடன்பட்டு இந்த நாட்டை கொண்டு நடத்துகின்ற நிலையிலும் இன்று தாயின் கருவில் இருக்கின்ற பிள்ளையின் தலையில்கூட கடன் சுமையைச் சுமத்தக்கூடிய நிலையில்தான் இந்த அரசு போய்க் கொண்டிருக்கின்றது.

அதற்கு இந்த அரசு மாத்திரம் காரணமல்ல. கடந்த காலங்களிலிருந்த அரசும் இதற்கு காரணமாகத்தான் இருக்கின்றது. அதற்கு முன்னர் இருந்த இதே அரசு திவிநெகும நிதி மோசடியிலிருந்து பல பல மோசடிகள் பேசப்பட்டதாக இருக்கின்றது.

பின்னர் வந்த ஆட்சியாளர்களில் மத்திய வங்கி பிணை முறி மோசடியிலிருந்து மகாபொல உள்ளிட்ட மோசடிகளும் பேசப்பட்டதாக இருந்தது. தீர்வுகள் எட்டப்படவில்லை. தற்பொழுது உள்ள இந்த அரசும் தங்களுடைய குடும்ப ஆட்சிக்குள் அமைச்சர்களை உருவாக்கிவிட்டு விளையாட்டுப்பிள்ளைகள் போன்று காசுகளை மத்திய வங்கி ஊடாக அச்சடித்துக்கொண்டு இன்றைக்குப் பெரிய பண வீக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றார்கள்.

பொருளாதார வல்லுனர்களைக் கொண்டு இந்த நாட்டினுடைய பொருளாதாரத்தை எவ்வாறு சீர்படுத்தலாம் என்ற எந்தவொரு சிந்தனைப் போக்கும் இல்லாமல் தொடர்ந்து இவ்வாறான பொருளாதார வீழ்ச்சிக்குள் தள்ளுவதென்பது ஒட்டுமொத்தமாக இந்த நாட்டின் மக்களுடைய வாழ்வியலைப் பெரிதும் பாதிக்கும்.

ஒருநேர உணவுக்குக்கூட மக்கள் அஞ்சுகின்ற நிலையில், கொலை கொள்ளை எனும் நிலைக்கு இந்த நாடு தள்ளப்படும் என்பது ஒரு வருத்தத்துக்குரிய விடயமாக இருக்கின்றது.

காணாமல் போனவர்கள் தொடர்பாக எந்தவொரு தீர்ப்பையும் சொல்லாமல், அல்லது எந்தவொரு விசாரணையையும் ஆக்கப்பூர்வமாக இதயசுத்தியுடன் முன்னெடுக்காமல் 300 மில்லியனை இந்த வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கியுள்ளதாக இந்த வரவு செலவு திட்டத்தில் கூறுவதென்பது சர்வதேசத்தை ஏமாற்றுவதாக இருக்கும்.

சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் ஓர் பூர்வாங்க விசாரணை ஒன்றைச் சர்வதேச மத்தியஸ்தத்துடன் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கின்றோம். அவர்களிற்கு என்ன நடந்தது என்ற பொறுப்பு கூறலைக் கூறாமல், வெமனே 300 மில்லியனை ஒதுக்கிவிட்டதாக அரசு சர்வதேசத்தை ஏமாற்றுகின்றது.

இந்த ஏமாற்றத்துக்கு எங்களுடைய மக்கள் ஒருபோதும் துணை போக மாட்டார்கள். எனவே இந்த அரசாங்கம் முதலில் பொறுப்பு கூறலை இதயசுத்தியுடன் செய்வதற்குத் தயாராக வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களாக நாங்கள் கேட்கின்ற கோரிக்கையைச் செவிமடுக்கவேண்டிய தேவையும், கடப்பாடும் அவர்களிற்கு இருக்கின்றது.

ஏனெனில் இச்சர்வதேசத்தில் தங்களை நல்லவர்கள்போல் காட்டிக்கொண்டு, மனித உரிமையை தாங்கள் மேம்படுத்துவதுபோலும் காட்டிக்கொண்டு செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற இந்த தருணத்தில் இந்த நிதி ஒதுக்கீட்டை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்..

நன்றி நவிலல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

விடத்தல்தீவு, மன்னார்

06 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், நல்லூர்

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Mitcham, United Kingdom

06 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Guildford, United Kingdom

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம்

05 Nov, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், kilinochchi

04 Nov, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US