தேர்தல் காலங்களில் கூட பட்டினி போடும் அரசு : ரவிகரன் குற்றச்சாட்டு
தேர்தல் காலங்களில் கூட பட்டினி போடும் வேலையில் தான் அரசு செயற்பட்டு வருகின்றது என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட கடற்பிரதேசங்களை அண்டிய சில பகுதிகளில் அந்நிய கடற்றொழிலாளர்கள் சட்டவிரோதமாக கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறித்த விடயம் தொடர்பாக முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரனுக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து நேற்றையதினம் (04.09.2024) இரவு சம்பவ இடத்திற்கு நேரடியாக சென்று பார்வையிட்டதன் பின்னரே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் காலம்
முல்லைத்தீவு கொக்குளாய், கர்நாட்டுக்கேணி,கொக்குதொடுவாய் ஆகிய பகுதிகளின் கடற்பரப்புக்கு நேராக சுமார் 100 மீற்றர் தூரத்தில் கரவலைபாடுகள் வலைக்கக்கூடிய மிகவும் குறைந்த கரையோர பகுதிகளில் பல நூற்றுக்கணக்கான படகுகள் வெளிச்சம் பாய்ச்சி மீன்பிடித்தல், சுருக்குவலை என சட்டவிரோதமாக அத்துமீறி நுழைந்து அந்நிய சக்திகள் தொழில் செய்வதனால் எங்களுடைய கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் மிகவும் மோசமாக பாதிக்கப்படுகின்றது.
தேர்தல் காலங்களில் கூட எங்களை பட்டினி போடும் வேலையில் தான் அரசு செயற்பட்டு வருகின்றது
இந்த தேர்தல் காலங்களில் கூட இவ்வாறான மோசமான செயற்பாடுகளை செய்ய இந்த அரசு தான் உடந்தையாக இருக்கின்றது எனவும் துரைராசா ரவிகரன் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





விளாடிமிர் புடின் உட்பட... சீனாவில் ஒன்று கூடும் உலகத்தலைவர்கள்: ட்ரம்பிற்கு புதிய நெருக்கடி News Lankasri

Ethirneechal: அறிவுக்கரசியை சின்னாபின்னமாக்கிய தர்ஷினி! ஈஸ்வரியின் போனை கைப்பற்றிய மருமகள்கள் Manithan

மறைந்த தொகுப்பாளர் ஆனந்த கண்ணனுக்காக சூப்பர் சிங்கர் மேடையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்... வீடியோ இதோ Cineulagam

சன் டிவியில் ஒளிபரப்பாகும் 2 ஹிட் சீரியல்களின் மெகா சங்கமம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
