தமிழர்களை ஒதுக்கப்பட்ட இனமாக பார்க்கும் அரசாங்கம்: கருணாகரம் எம்.பி குற்றச்சாட்டு
தமிழர்களை ஒதுக்கப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட இனமாகவே இந்த நாட்டின் அரசாங்கம் பார்ப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் நேற்று (26.05.2024) இடம்பெற்ற தேற்றாத்தீவு வெற்றி விநாயகர் விளையாட்டுக் கழகத்தின் 25ஆவது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
“ஜனாதிபதித் தேர்தல் நெருங்குவதால் தமிழ் மக்கள் சிந்தித்துச் செயற்படவேண்டிய ஒரு காலகட்டத்திலே இருக்கின்றோம்.
ஏனெனில் கடந்த கால ஜனாதிபதிகள், தமிழ் மக்களின் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சனைக்கு ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வை வழங்கவில்லை.
இந்த விடயத்தில் தான் தமிழ் மக்கள் எமது ஒற்றுமையையும் பலத்தையும் நிரூபிக்கவேண்டிய தேவையில் இருக்கின்றோம்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |