எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசாங்கம் வலைவீச்சு
எதிர்வரும் அமைச்சரவை மாற்றத்தின் போது அமைச்சுப் பதவி வழங்கப்படும் என்று தெரிவித்து எதிர்க்கட்சிகளின் முக்கியஸ்தர்களுக்கு அரசாங்கத் தரப்பில் இருந்து வலைவீசப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் நாட்களில் அமைச்சரவை மாற்றமொன்றை மேற்கொள்ள ஜனாதிபதி உத்தேசித்துள்ளார்.
அமைச்சுப் பதவிகள்
இதன்போது எதிர்க்கட்சிக்கு கட்சி மாறினால் அமைச்சுப் பதவிகள் வழங்கப்படும் என்று எதிர்க்கட்சியின் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலருக்கு அரசாங்கத் தரப்பில் இருந்து ஆசை காட்டப்பட்டுள்ளது.

தற்போதைக்கு எதிர்க்கட்சிகளின் இரண்டு பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட நான்கு முக்கியஸ்தர்கள் எதிர்க்கட்சிக்கு தாவும் தீர்மானம் தொடர்பில் பச்சைக் கொடி காட்டியுள்ளனர்.
எதிர்வரும் நாட்களில் எதிர்க்கட்சியில் இருந்து மேலும் சிலர் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri
Bigg Boss: கதவை திறக்க பிக்பாஸிடம் கூறிய பிரஜன்... பரிதாப நிலையில் விக்ரம்! வெடிக்கும் சண்டை Manithan