சவூதி அரேபியாவில் மரண தண்டனை எதிர்கொண்டுள்ள அனோஜன்! காப்பாற்ற அரசாங்கம் எடுத்துள்ள தீவிர நடவடிக்கை
சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜனை காப்பாற்ற அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிப்பதற்காக இன்று (22) நடைபெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,
தூதரக மட்டத்திலும் தலையீடுகள்
அனோஜன் விவகாரம் தொடர்பில் தகவல் தெரிவிக்கப்பட்ட நாள் முதலிருந்து தூதரக மட்டத்திலும் வெளிநாட்டுத் தூதரகங்கள் மூலமாகவும் தேவையான தலையீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.

இளைஞரைக காப்பாற்ற தேவையான தலையீட்டைக்கோரி, ஜனாதிபதி சவூதி மன்னருக்குக் கடிதம் அனுப்புவதற்கான தேவையான நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டுள்ளது..
இந்தக் கடிதத்தை சவூதி மன்னரிடம் ஒப்படைப்பதற்காக, பிரதி சபாநாயகர் தலைமையிலான நாடாளுமன்ற குழுவை அரசாங்கம் அனுப்ப எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சவூதி மன்னருக்கு கடிதம்
மேலும், ஜனாதிபதியின் வேண்டுகோளின்படி சவூதி மன்னருக்கு, இளைஞரை இந்த குற்றத்திற்காக மன்னித்து, அவரது தண்டனையைக் குறைக்குமாறு கோரி ஒரு கடிதத்தைச் சமர்ப்பிக்க நாங்கள் தயாராகி வருகிறோம்.

மேலும், இவ்வழக்கிற்காக இதுவரை செலவிடப்பட்ட முழுத்தொகையையும் நாங்கள் திருப்பிச்செலுத்துவோம், மேலும் எதிர்காலச் செலவுகள் அனைத்தையும் அரசாங்கமே ஏற்கும் என்பதை உறுதி செய்வோம்.
அரச தரப்பிலிருந்து சட்ட உதவியை வழங்கி அனோஜனை காப்பாற்ற அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சற்றுநேரத்தில் வெளியாகவுள்ள உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கின் முக்கிய தீர்ப்பு - தீர்ப்பு வாசிப்பு ஆரம்பமானது