அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு! அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை
அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பான நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த வகையில் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கும் அவர்களின் தொழில்சார் நிபுணத்துவத்தை மேம்படுத்துவதற்குமான விசேட ஆணைக்குழுவை நிறுவும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
அரச துறையில் பல தசாப்தங்களாக நிலவி வரும் சம்பள முரண்பாடுகள் மற்றும் தொழில்முறை சார்ந்த பிரச்சினைகளுக்கு இந்த ஆணைக்குழுவின் ஊடாக தீர்வு காண எதிர்பார்க்கப்படுகிறது.
விசேட ஆணைக்குழு நிறுவல்
அரச ஊழியர்களின் சம்பள முரண்பாடுகளைக் களைந்து, அவர்களின் தொழில்சார் நிபுணத்துவத்தை மேம்படுத்துவதற்காக விசேட ஆணைக்குழுவொன்று நிறுவப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பான அறிவிப்பு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் 2026ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அரச ஊழியர்களின் நீண்டகாலக் கோரிக்கைகளுக்குத் தீர்வுகாணும் நோக்கில் இந்தச் செயல்முறை தற்போது உத்தியோகபூர்வமாகத் தொடங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மதுமிதாவிற்கு ஏற்பட்ட சோகம்... வெளிவந்த வீடியோ Cineulagam
விபத்தில் சிக்கிய சோழன்.. மருத்துவமனையில் அனுமதி.. கதறி அழும் நிலா.. அய்யனார் துணை சீரியல் Cineulagam