அரச அதிகாரிகளின் விடுமுறை தொடர்பில் வெளியான புதிய சுற்றறிக்கை
கோவிட் தொற்றுநோய்களின் போது வெளிநாட்டில் நிலவிய சூழ்நிலை காரணமாக பணிக்குத் திரும்பத் தவறிய அரசாங்க அதிகாரிகளின் விடுமுறைக்கு ஒப்புதல் வழங்குவது தொடர்பான புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அரச நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் இது தொடர்பான சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
விடுப்பு தொடர்பான நடவடிக்கை
இந்த சுற்றறிக்கை அனைத்து அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு கோவிட் தொற்றுநோய் நிலைமை காரணமாக வெளிநாட்டில் இருந்து உரிய திகதியில் பணிக்கு திரும்பத் தவறிய அரச ஊழியர்களின் விடுப்பு தொடர்பாக எவ்வாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, முறையான விடுமுறை அனுமதியின்றி பணிக்கு சமூகமளிக்காத அனைத்து அரச அதிகாரிகளுக்கும் பதவி விலகல் அறிவிப்பை வெளியிடுமாறும் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள 'சிறை' திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா? Cineulagam
சரிகமப: தனியாக வந்த சிறுமிக்காக பாடகி சைந்தவி செய்த விடயம்... கண்ணீர் மல்க வைக்கும் காட்சி! Manithan
நேட்டோ பிரதேசத்திற்குள் அத்துமீறிய ரஷ்யப் பாதுகாப்புப் படையினர்... அதிகரிக்கும் பதற்றம் News Lankasri
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri