மின்சாரம் துண்டிக்கப்பட்டால் அதற்கான பொறுப்பினை அரசாங்கம் ஏற்க வேண்டும் : ஜே.வி.பி
நாட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டால் அதற்கான பொறுப்பினை அரசாங்கம் ஏற்றுக்கோள்ள வேண்டுமென ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்(Vijitha Herath) தெரிவித்துள்ளார்.
நாட்டில் மின்சாரம் துண்டிக்கப்படுவதனை தடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடப்பாடாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
யுகதனவி மின் நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கிய தீர்மானத்தை அரசாங்கம் வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டுமென அவர் கோரியுள்ளார்.
அரசாங்கத்தின் செயற்பாடுகளின் காரணமாக இலங்கை மின்சார சபை பணியாளர்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள நேரிட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய வளங்களை பாதுகாப்பதாக கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் இன்று நாட்டின் முக்கியமான தேசிய சொத்துக்களில் ஒன்றான சக்தி வளத்துறையை விற்பனை செய்ய முயற்சிப்பதாக விஜித ஹேரத் குற்றம் சுமத்தியுள்ளார்.