கோட்டாபய ராஜபக்சவின் பாதுகாப்பு தொடர்பில் ஜனாதிபதி சட்டத்தரணியின் கோரிக்கை

Gotabaya Rajapaksa Ranil Wickremesinghe United States of America Sri Lankan political crisis Singapore
By Sivaa Mayuri Jul 26, 2022 07:52 AM GMT
Report

செவிவழி சாட்சியங்களின் அடிப்படையிலும், ஆதாரமற்ற போர் குற்றச்சாட்டுகள் மூலமும் சில தரப்பினரால் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு வரும் அச்சுறுத்தல்களிடமிருந்து அவரை பாதுகாக்கும் பொறுப்பிலிருந்து அரசாங்கம் விடுபட முடியாது என ஜனாதிபதி சட்டத்தரணி மனோகர டி சில்வா புதிய அரசாங்கத்திற்கு நினைவூட்டியுள்ளார்.

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியை போர் குற்றம் தொடர்பாக கைது செய்யுமாறு சிங்கப்பூர் சட்டமா அதிபரிடம் தென்னாபிரிக்காவை தளமாக கொண்ட சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டத்தின் (ITJP) சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதியின் வெளிநாட்டு பயணம்

இது தொடர்பாக சட்டத்தரணி தெரிவித்ததாவது,

"முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச படுகொலைகள் உட்பட பல கொடூரமான குற்றங்களுக்கு காரணமான விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரை, 2009 மே மாதம் இலங்கை வெற்றிகரமாக முடிவுக்கு கொண்டுவந்தது.

கோட்டாபய ராஜபக்சவின் பாதுகாப்பு தொடர்பில் ஜனாதிபதி சட்டத்தரணியின் கோரிக்கை | Government Should Protect Ex President

இந்த நிலையில், முன்னாள் பாதுகாப்பு செயலாளருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கும் குறிப்பிட்ட தரப்பினருக்கு உதவும் வகையிலும் முன்னாள் ஜனாதிபதிக்கு விசா வழங்க அமெரிக்கா மறுத்திருக்கலாம்.

முன்னாள் ஜனாதிபதி தனது மனைவி மற்றும் 2 மெய்ப்பாதுகாவலர்களுடன் ஜூலை 14ஆம் திகதி மாலைதீவில் இருந்து சிங்கப்பூர் சென்றடைந்துள்ளார். தொடர்ந்து, அங்கு அவருக்கு பாதுகாப்பாற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போதைய அரசாங்கத்தின் பொறுப்பு

தற்போதைய அரசாங்கம், முன்னாள் ஜனாதிபதி பாதுகாப்பாக நாடு திரும்புவதற்கு உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும்.

கோட்டாபய ராஜபக்சவின் பாதுகாப்பு தொடர்பில் ஜனாதிபதி சட்டத்தரணியின் கோரிக்கை | Government Should Protect Ex President

முன்னாள் ஜனாதிபதி இலங்கையில் வாழ்வதற்கு அரசின் பாதுகாப்பில் தங்குமிடங்கள் உட்பட போதுமான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

ராஜபக்சக்களை அகற்றுவதற்கான மேற்குலக முயற்சிகள்

ஐக்கிய நாடுகள், இலங்கை தொடர்பில் அமைத்த தாருஸ்மன் குழு உறுப்பினரான, யஸ்மின் சூக்கா சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டத்தின் (ITJP) சட்டத்தரணிகளின் நிறைவேற்று பணிப்பாளர் ஆவார். இவர் இலங்கையின் போர்க்கால அரசியல் மற்றும் இராணுவ தலைமைக்கு எதிராக பெரும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

கோட்டாபய ராஜபக்சவின் பாதுகாப்பு தொடர்பில் ஜனாதிபதி சட்டத்தரணியின் கோரிக்கை | Government Should Protect Ex President

இந்த சூழ்நிலையில், முன்னாள் ஜனாதிபதிக்கு எதிரான சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டத்தின் (ITJP) சட்டத்தரணிகளின் நடவடிக்கையானது, ராஜபக்சக்களை அகற்றுவதற்கான மேற்குலக முயற்சிகளின் பின்னணியில் ஆராயப்பட வேண்டும் என மியன்மாருக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் பேராசிரியர் நளின் டி சில்வா தெரிவித்துள்ளார்.  

கோட்டாபயவுக்கு இறுகும் பிடி! உடனடியாக கைது செய்க - சிங்கப்பூர் அரசாங்கத்திடம் அவசர வேண்டுகோள் 


1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US