கோட்டாபயவை கைது செய்ய ஒப்பமிடுவோம்! உலக தமிழர்களுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு

Gotabaya Rajapaksa Sri Lanka Politician Sri Lanka Sri Lankan Peoples Sri Lankan political crisis
By Chandramathi Jul 25, 2022 07:29 AM GMT
Report

சிங்கப்பூரில் தற்போது நிலைகொண்டுள்ள இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌சவினை, உலகளாவிய நியாயாதிக்கத்தின் கீழ் கைது செய்து நீதியின் முன் நிறுத்தும்படி சிங்கப்பூர் சட்டமா அதிபருக்கான கையெழுத்து போராட்டத்தினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடங்கியுள்ளது.

புலம்பெயர் நாடுகளில் சிங்கப்பூர் தூதரகங்களை நோக்கி கவனயீர்ப்பு போராட்டங்களையும், கோரிக்கை மனுவினை கையளித்திருந்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், அதன்தொடர்சியாக தற்போது (ஒப்பிடுவதற்கான இணைப்பு : https://chng.it/rQVfCj4KdQ ) இக்கையெழுத்து போராட்டத்தினை தொடங்கியுள்ளது.

கோட்டாபயவை கைது செய்ய வேண்டியதன் அவசியம் 

கோட்டாபயவை கைது செய்ய ஒப்பமிடுவோம்! உலக தமிழர்களுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு | Agree Arrest Gotabaya Invitation Amils World

இது தொடர்பில் உலகத்தமிழ் உறவுகளை நோக்கி அழைப்பினை விடுத்துள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன்,“இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி இனப்படுகொலை, மானிடத்திற்கெதிரான குற்றம் மற்றும் போர்க் குற்றங்களைப் புரிந்தவர். இதற்கான நம்பத்தகுந்த சாட்சியங்கள் உள்ளதாக ஐக்கிய நாடுகள் அறிக்கைகள் கூறியுள்ளன.

1948ம் ஆண்டு இன அழிப்பு சட்டத்தின் கீழும், 1949ம் ஆண்டு ஜெனீவா சட்டங்களின் கீழும் மற்றும் 1977ம் ஆண்டு additional protocol 1 இன் கீழும் சர்வதேச சட்டங்களின் கீழ் நாம் இந்த கோரிக்கைகளை சிங்கப்பூர் சட்ட மாஅதிபரினை நோக்கி முன்வைக்கின்றோம்.

சர்வதேச சட்டங்கள் மட்டுமின்றி, சிங்கப்பூரின் உள்நாட்டு சட்டங்களின் அடிப்படையிலும் கூட, ஜெனீவா சட்டம் தொடர்பாக சிங்கப்பூர் உள்நாட்டுச் சட்டம், சிங்கப்பூரின் குற்றவியல் சட்டத்தின் கீழும், அவரைக் கைது செய்து நீதியின் முன் நிறுத்த வேண்டிய கடமைப்பாடு சட்டமா அதிபருக்கு உண்டு என்பதை நாம் இங்கு சுட்டிக்காட்டி இருக்கின்றோம்.

கோட்டாபயவை கைது செய்ய ஒப்பமிடுவோம்! உலக தமிழர்களுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு | Agree Arrest Gotabaya Invitation Amils World

மேலும் 2011ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் முன்னாள் செயலாளர் பான் கீ மூனால் அமைக்கப்பட்ட நிபுணர் குழு அறிக்கையிலும் இலங்கையின் பிரச்சினைக்கு அடிப்படைக் காரணம், தமிழர்கள் அங்கு அரசியல் நீரோடையில் இல்லை என்றும் 'the root caused is the conflict' என்று கூறியிருப்பதையும் மற்றும் 2021ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் பஷிலேற்  'dangerous exclusionary policy of the Sri Lankan Government' என்று அதாவது அங்கே இனநாயகம் தலைதூக்கி இருப்பதையும் நாங்கள் இங்கு சட்டிக்காட்டி, மேலும் இலங்கை ஒரு இனவாத அரசு, அரச கட்டமைப்புக்கள் நீதிமன்றம் உட்பட சிங்களத்தை மையப்படுத்தி இருப்பதால் அங்கு தமிழர்களுக்கு நீதி கிடைக்காது என்பதையும் நாம் இம் மனுவில் சுட்டிக்காட்டி உள்ளோம்.

உலகளாவிய நியாயாதிக்கத்தின் கீழ் இலங்கையில் நடந்த இந்தக் குற்றங்கள் அந்தந்த நாடுகளின் நீதிமன்றங்களில் விசாரிக்க வேண்டும் என ஐ.நா மனித உரிமை சபையின் முன்னாள் ஆணையாளர் நவிப்பிள்ளை, அல்குசேன் மற்றும் தற்போதைய ஆனையாளர் மிசேல் பசேலே ஆகியோர் நாடுகளை நோக்கி முன்வைத்த கோரிக்கையினையும் எமது கோரிக்கையில் சுட்டிக்காட்டி உள்ளோம்.

தமிழர்களுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு

கோட்டாபயவை கைது செய்ய ஒப்பமிடுவோம்! உலக தமிழர்களுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு | Agree Arrest Gotabaya Invitation Amils World

இன்றைக்கு கோட்டாபய ராஜபக்‌ச திரும்பவும் கொழும்புபிற்கு திரும்பினால், அவர் அங்கு ஊழல் குற்றங்களுக்காகவே நீதியின் முன்னால் நிறுத்தப்படுவாரேயன்றி, தமிழன படுகொகைக்காகவோ, மானிடத்திற்கெதிரான குற்றங்களுக்கு எதிராகவோ, போர் குற்றங்களுக்காவோ நீதியின் முன் நிறுத்தப்படமாட்டார்.

தற்சமயம் சர்வேந்திர டி சில்வா இன்னொரு இனப்படுகொலையாளி. இன்னொரு போர்க்குற்றவாளி. அமெரிக்காவின் sanction இற்கு உள்ளானவர் இன்றைக்கு அங்கு ஒரு முக்கிய பதவியை வகித்துக் கொண்டு வருகின்ற இந்த வேளையில் அங்கு தமிழர்களுக்கான நீதி ஒருபோதும் கிடையாது.

எனவே சிங்கப்பூர் கோட்டாபயவை கைது செய்து விசாரித்து நீதியின் முன்னால் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை தாயகத்தில் வசிக்கும் ஈழத்தமிழர்கள் சார்பாகவும், புலத்தில் வசிக்கும் தமிழர்கள் சார்பாகவும், உலகத்தில் தமிழர்கள் சார்பாகவும் நாங்கள் இந்த கோரிக்கையை வைத்து இந்தக் கையெழுத்து போராட்டத்தினை தொடங்கியுள்ளோம். இது உடனடியாக செய்ய வேண்டிய விடயம்.

ஏனெனில் ராஜபக்‌ச எந்த சமயமும் சிங்கப்பூரை விட்டு வெளியேறிவிடுவார் எனவே விரைவாக இதில் அனைவரும் கையெழுத்து இட்டு உலகளாவிய தமிழர்களின் கோரிக்கை இது என்பதை சிங்கப்பூர் சட்டமா அதிபருக்கு நாங்கள் எடுத்துரைப்போம்”என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் கோரியுள்ளார்.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US