ஊடக சுதந்திரத்தின் மீது கை வைக்க வேண்டாம்! அரசாங்கத்திற்கு பதில்

Government Kaluwanchikudy Ranjitmatrumapandara Mediafreedom
By Rusath Feb 15, 2022 09:40 AM GMT
Report

நாட்டில் ஊடக சுதந்திரம் உள்ளிட்ட அனைத்தையும் பாதுகாக்க வேண்டிய கடப்பாடு அனைவருக்கும் உள்ளது. அரசாங்கம் ஊடக சுதந்திரத்தின் மீது கைவைக்கக்கூடாது என ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்ஜித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளர் சோ.கணேசமூர்த்தி தலைமையில் மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள இராசமாணிக்கம் மண்டபத்தில் இன்று(15) நடைபெற்ற கட்சி ஆதரவாளர்களுடனான ஒன்றுகூடலில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்களான புத்திக்க பத்திரன, இம்ரான் மஹ்ரூப், மற்றும் கட்சி ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

களவு செய்கின்ற ஆட்சியாளர்கள் தான் இந்த நாட்டிலே இருக்கின்றார்கள். இனி இவற்றை விட்டு விட்டு நாட்டுக்கு ஒரு நேர்மையான அரசியல் தலைவரைத் தேர்வு செய்யவேண்டும். அரசாங்கத்தின் சொத்துக்களைச் சூறையாடுகின்றவர்களை நாங்கள் வீட்டுக்கு அனுப்ப வேண்டும். நாட்டில் ஆட்சியை அமைக்கின்ற செல்வாக்கும் தகுதியும் சஜித் பிரேமதாஸக்கு தான் உள்ளது.

அவரால்தான் உறுதியான ஆட்சியை நிறுவ முடியும். இந்நாட்டிலுள்ள அனைத்து மக்களையும் இணைத்துக் கொண்டு புதிய திட்டங்களினூடாக பணிப்பதற்கு எமது கட்சியின் உயர் பீடம் திட்டம் தீட்டியுள்ளது. இதில் அனைத்து மக்களையும் அரவணைத்துச் செல்கின்ற கொள்கை ரீதியான வேலைத்திட்டங்களை நாம் இணைத்துள்ளோம்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸவுக்கு இப்பகுதி மக்கள் அமோகமாக வாக்களித்திருந்தார்கள். அதுபோல் அவருடைய தலைமையிலான ஆட்சி மிகவிரைவில் நிறுவப்படும். அதற்காக வேண்டி மக்கள் தொடர்ந்து எம்முடன் இணைந்திருக்க வேண்டும்.

முதல்கட்டமாகப் பட்டிருப்புத் தொகுதியில் அமைந்துள்ள 116 வாக்களிப்பு நிலையங்களையும் மையப்படுத்தி குழுக்களை அமைக்க வேண்டும். நாட்டில் ஒரு நேர்மையான அரசாங்கத்தை அமைப்பதற்குத் தமிழ் மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

நாட்டில் தற்போது ஊடகத்துறைக்கு ஒரு அச்சமான நிலைமை ஏற்பட்டுள்ளது. அரசு செய்யும் பிழைகளைச் சுட்டிக்காட்டுகின்றபோது ஊடகங்களைப் பயம் காட்டுகின்றார்கள்.

நேற்றைத்தினம் ஊடகவியலாளர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார். எந்த அரசாங்கமாக இருந்தாலும் அவர்கள் விடும் தவறுகளைச் சுட்டிக்காட்ட வேண்டியது ஊடக தர்மமாகும். அதனைக் காப்பாற்ற வேண்டியது யார்? தேசியப் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என ஆட்சிக்கு வந்த ஜனாதிபதியால் அது இன்று நடைபெறவில்லை.

ஊடகவியலாளர் ஒருவர் சுதந்திரமாகச் செயற்பட முடியாதுள்ளது. இதனைப் பாதுகாக்க வேண்டியுள்ளது. இவ்வாறு நடைபெறுகின்ற அனைத்து செயற்பாடுகளுக்கும் அரசாங்கம் தான் பொறுப்புக்கூற வேண்டும்.

கடந்த காலங்களில் ஏற்படுத்தப்பட்ட குண்டு வெடிப்புச் சம்பவங்களைக் காரணம் காட்டி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் அது தொடர்பில் நீதியான விசாரணைகளை முன்னெடுக்கத் தயங்குகின்றது.

எனவே ஊடக சுதந்திரம் உள்ளிட்ட அனைத்தையும் பாதுகாக்க வேண்டிய கடப்பாடு அனைவருக்கும் உள்ளது. அரசாங்கம் ஊடக சுதந்திரத்தின் மீது கைவைக்கக்கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.

நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US