அரசாங்கத்தை மன்னிக்கக்கூடாது-எல்லே குணவங்ச தேரர்
74 ஆண்டுகள் நாட்டை ஆட்சி செய்த ஆட்சியாளர்களின் ஊழல், மோசடிகள்,முறைகேடுகள் மற்றும் மின்சார கட்டணத்தை அடிக்கடி அதிகரித்து மக்கள் மீது சுமையை ஏற்றும் தற்போதைய அரசாங்கத்திற்கும் எவ்வித மன்னிப்பையும் வழங்கக்கூடாது என எல்லே குணவங்ச தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகம் ஒன்றிடம் கருத்து வெளியிடும் போதே நேற்று அவர் இதனை கூறியுள்ளார்.
யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்
யானைக்கு ஒரு காலம் வந்தால், பூனைக்கும் ஒரு காலம் வரும்.தற்போது பூனைக்கு காலம் வந்துள்ளது. இதனால், அதனை தவறவிடக்கூடாது. எதிர்வரும் தேர்தலில் மக்கள் இதனை வெளிக்காட்ட வேண்டும். அது நாட்டின் எதிர்காலத்திற்கு மிகவும் முக்கியமானது.
மின்சக்தி அமைச்சருக்கு மக்கள் மீது அக்கறையில்லை. தற்போது தேர்தல் வருகிறது. மக்கள் எப்போதும் எமாற மாட்டார்கள். தேர்தலில் அரசாங்கத்திற்கு மக்கள் உரிய பதிலை வழங்குவார்கள் எனவும் எல்லே குணவங்ச தேரர் கூறியுள்ளார்.

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
