சா்வதேச நாணய நிதியத்தினால், அரசாங்கத்துக்குள் தொடரும் பிளவு
சர்வதேச நாணய நிதியத்தின் உதவி தொடர்பில் இலங்கையின் அமைச்சரவையிலும் அரசாங்கத்தின் உறுப்பினர்கள் மத்தியிலும் முரண்பாட்டு நிலை ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து கடந்த வாரத்தின் அமைச்சரவை குறித்த விடயத்தில் எவ்வித இணக்கமும் இன்றி முடிவடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தற்போதைய பொருளாதார நிலையை சீர்செய்வதற்காக சர்வதேச நாணய நிதியத்திடம் செல்லவேண்டும் என்று அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா வலியுறுத்தியுள்ளார்
சர்வதேச முதலீட்டாளர்களை கவர்ந்திழுக்க அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வது அவசியம் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்
இந்தநிலையில் மத்திய வங்கியின் ஆளுநர், அதன் ஆளுநராக செயற்படாமல்ஈ ஒரு அரசியல்வாதியாக செயற்படுவதாக அனுர பிரியதர்சன யாப்பா குற்றம் சுமத்தியுள்ளார்
நாணய மாற்று பிரச்சினையை தீர்க்கவேண்டியது அவரின் பொறுப்பு என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டமை காரணமாகவே கடந்த நல்லாட்சி அரசாங்கம் மக்களால் நிராகரிக்கப்பட்டதாக பேராசிரியர் திஸ்ஸ விதாரன குறிப்பிட்டுள்ளார்.