முட்டாள்தனமான தீர்மானங்களால் நாட்டையே தீக்கிரையாக்கியுள்ளது அரசு! சாடுகின்றார் நளின் பண்டார எம்.பி
"காபனிக் உரப் பிரச்சினையால் முழு நாடும் பற்றி எரிகின்றது. முட்டாள்தனமான முடிவுகளால் நாட்டையே அரசு தீக்கிரையாக்கியுள்ளது." என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
அவர் ஊடகங்களிடம் மேலும் தெரிவிக்கையில்,
"உரப் பிரச்சினை காரணமாக விவசாய நிலங்கள் தீயில் எரிகின்றன. விவசாயிகளின் வயிறும் எரிகின்றது. அதுமட்டுமன்றி சமையலறை தீப்பற்றி எரிகின்றது. முட்டாள்தனமான முடிவுகளால் நாட்டையே தீக்கிரையாக்கியுள்ளனர்.
மரத்தின் வேர்கள் வலுவிழக்கும்போது, கிளைகளைச் சபிப்பது பயனற்றது. அங்கு முழு அமைப்பும் உடைந்து விடுகின்றது.
ஜனாதிபதி, அதிகாரிகளைத் திட்டுவதில் அர்த்தமில்லை. ஜனாதிபதியின்
முடிவுகளினாலேயே நாட்டில் இவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri

Baakiyalakshmi: தூக்கி வீசப்பட்ட மாமனார் புகைப்படம்! சுதாகருக்கு பாக்கியா விடுத்த எச்சரிக்கை Manithan
