அடுத்த மாதம் அரச ஊழியர்களை பணிக்கு அழைப்பது தொடர்பில் வெளியான தகவல்
எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி அரச ஊழியர்கள் கடமைக்கு அழைக்கும் போது நிறுவனத்தின் பிரதானிகளின் தேவைக்கு ஏற்ப ஊழியர்கள் அழைக்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுச் சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி நேற்று இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜனவரி மாதம் முதலாம் திகதி அரச ஊழியர்கள் வருகைதந்த பின்னர் கொரோனா நிலைமையை கருத்திற் கொண்டு அவசியமான நபர்கள் பணிக்கு அழைக்கப்படுவது போதுமானதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரச ஊழியர்கள் பணிக்கு வரும் போது பற்றிக் அல்லது தங்களுக்கு பிடித்த பொருத்தமான உடைகளில் வரலாம் என அவர் கூறியுள்ளார்.
நாட்டில் கொரோனா நிலைமையில் குறைவு ஏற்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு அறிவித்தால், அரச ஊழியர்கள் அனைவரும் வழமை போன்றே கடமைக்கு வர வேண்டும் என சுற்றறிக்கை வெளியிடப்படும் என கூறியுள்ளார்.
அந்த சுற்றறிக்கைக்கமைய கடமைக்கு வருகைதர வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri