பெறுமதி சேர் வரி அதிகரிப்பால் ஏற்பட்ட மாற்றம்: நிதி இராஜாங்க அமைச்சர் அறிவிப்பு
அரசாங்கத்தால் அறிமுகம் செய்யப்பட்ட பெறுமதி சேர் வரி அதிகரிப்பு காரணமாக ஜனவரி மாதத்தில் அரசாங்கத்தின் வருமானம் 25 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
219 பில்லியன் ரூபா வருமானம் எதிர்பார்க்கப்பட்ட போதும், 274 பில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், சுங்கத் திணைக்களத்தின் வருமானம் 11 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.
வருமானம் அதிகரிப்பு
மதுவரித் திணைக்களத்தின் வருமானமும் கூட எதிர்பார்த்ததை விட அதிகரித்துள்ளது.

அத்துடன் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் வருமானம் 114 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது.
எனவே அரசாங்க வருமான அதிகரிப்பானது நாட்டுப் பிரஜைகளின் நலனை மேம்படுத்தும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அமெரிக்க ஒப்பந்தத்தை மறுத்தால் ஜெலென்ஸ்கி கொல்லப்படலாம்... ரஷ்யாவில் இருந்து கசிந்த தகவல் News Lankasri