அறவிடப்படும் வரியைக் குறைக்க அரசாங்கம் தீர்மானம்
அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களின் மாதாந்த வருமானத்தைக் கணக்கிடும் போது அவர்களின் மாத வருமானத்தை நிதிப் பலனாகக் கருதி அறவிடப்படும் வரியைக் குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஊழியர்களின் சொந்த வீடுகள், வாகனங்கள், எரிபொருள் அல்லது போக்குவரத்து கொடுப்பனவுகள் போன்றவற்றினை கருத்திற்கொண்டு மாதாந்த நிதி பலனாகக் கருதி விதிக்கப்படும் வரியை குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் சிரேஷ்ட அமைச்சர்கள் இது தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிவித்திருந்தனர்.
தொழில் வல்லுநர்களுக்கு வரி விதிக்கும் போது குறைந்த ஊதியத்தில் இருந்து அறவிடப்படும் வரி சதவீதத்தை குறைக்க அமைச்சரவைக்கு உரிய பரிந்துரைகளை வழங்குமாறு நிதியமைச்சு அதிகாரிகளுக்கு, ஜனாதிபதி பணிப்புரை விடுத்ததாக அரசாங்கப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
சில அரச ஊழியர்கள் மற்றும் தனியார் துறை ஊழியர்கள் மாதாந்த வருமானத்தைப் பொருட்படுத்தாமல் அவர்களின் சம்பளத்திற்கு இணையான கொடுப்பனவுகளைப் பெறுவதால் மாதாந்த வருமானம் என அனைத்தையும் பொருட்படுத்தாமல் நிவாரணம் வழங்குவதே இந்த வரி திருத்தத்தின் நோக்கமாகும் என அமைச்சர் குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam
