ரஷ்யாவுடனான போரில் உக்ரைனின் உயிர்சேத விபரம் தொடர்பில் வெளியான தகவல்! செய்திகளின் தொகுப்பு
ரஷ்யாவுடனான போரில் 14 குழந்தைகள் உட்பட 352 பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அரசாங்கம் தகவல் வெளியிட்டுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைனின் ஏராளமான ராணுவ தளங்கள் மற்றும் போர் தளவாடங்களை அழித்துள்ள ரஷ்ய படைகள் தொடர்ந்து முன்னேறி வருகின்றன.
தலைநகர் கீவ்வை ரஷ்ய ராணுவ வீரர்கள் முழுமையாகக் கைப்பற்றும் நோக்கில் தற்போது உக்கிரமான தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இதேபோல் மற்றொரு பெரிய நகரமான கார்கிவிலும் ரஷ்ய படைகள் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
ரஷ்ய படைகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் உக்ரைன் வீரர்களும் கடுமையாகச் சண்டையிட்டு வருகின்றனர். இந்த சண்டையில் 4300 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டிருப்பதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான விரிவான தகல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மதியநேர செய்திகளின் தொகுப்பு,