இலட்சக்கணக்கான அஸ்வெசும பயனாளிகளுக்கான உதவித்தொகை நிறுத்தம்! காலக்கெடுவுடன் நீக்க அரசாங்கம் திட்டம்
அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் கீழ் நன்மையடைந்து வரும் குடும்பங்களில் மாற்று வழிகள் மூலம் தற்போது நிலையான வருமானத்தை பெறும் சுமார் 1 இலட்சம் குடும்பங்களை அத்திட்டத்திலிருந்து விடுவிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
பயனாளிகளை உடனடியாக நீக்காமல் அடுத்த 3 ஆண்டுகளுக்குள் படிப்படியாக நலன்புரி கொடுப்பனவுகளிலிருந்து விடுவிப்பதே அரசாங்கத்தின் திட்டமாகும் என்று கிராமிய அபிவிருத்தி சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
பிரதான நோக்கம்
மக்கள் நீண்டகாலமாக அரசாங்கத்தின் நலன்புரி உதவிகளில் மட்டும் தங்கியிருப்பதை தவிர்த்து அவர்களைத் தற்சார்பு பொருளாதார நிலைக்கு இட்டுச் செல்வதே இதன் பிரதான நோக்கம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தின் அடிப்படையில் கொடுப்பனவுகளை நிறுத்த வேண்டிய காலக்கெடு இருந்தபோதிலும் பல குடும்பங்களின் வருமானம் இன்னும் போதுமான அளவு உயரவில்லை என்பதால் உடனடியாக இந்த நிறுத்தத்தை மேற்கொள்ள முடியாது
தற்போது முன்னேற்றம் கண்டுள்ள 1 இலட்சம் குடும்பங்களும் சுயதொழில் நடவடிக்கைகள் நிதி உதவிகள் தொழில் பயிற்சி மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் போன்ற பல்வேறு வழிகளின் மூலம் தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருகின்றனர்.
அஸ்வெசும பட்டியலில் சேர்க்கப்படாத குடும்பங்கள்
2023ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த அஸ்வெசும திட்டமானது வறுமை நிலையின் அடிப்படையில் 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு 2,500 ரூபா முதல் 15,000 ரூபா வரை கொடுப்பனவுகளை வழங்கி வருகின்றது.

இத்திட்டமானது வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டாலும் தகுதியுள்ள பல ஏழைக் குடும்பங்கள் இன்னும் அஸ்வெசும பட்டியலில் சேர்க்கப்படாமை மற்றும் தகுதியற்ற சிலர் உள்வாங்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் 2027ஆம் ஆண்டு முதல் 2029 வரையான காலப்பகுதிக்குள் அதிகளவான குடும்பங்களை மேம்படுத்தி பயனாளிகளின் எண்ணிக்கையைக் குறைத்துக்கொள்வதே அரசாங்கத்தின் இறுதி இலக்கு என்றும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மோசமான வானிலை! நிலத்தில் வெடிப்புகள் தென்பட்டால் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அவசர எச்சரிக்கை
ஹார்முஸ் நீரிணையில் இந்திய வணிகக் கப்பல் ஒன்று தாக்கி மூழ்கடிப்பு: பிடியை இறுக்கும் ஈரான் News Lankasri