ஐந்தாயிரம் கொடுப்பனவு தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!
நாடு முடக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவு வழங்க முடியும் என்று தான் நினைக்கவில்லை என்று இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
எனினும், 2,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படலாம் என்று தான் கருதுவதாக அவர் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.
இந்த நேரத்தில் நாடு மிகவும் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றது. இந்த முறை பேரிடரிலிருந்து மீள முடியாத சூழ்நிலையில் இருந்ததால் இம்முறை முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சிறிலங்கா சுதந்திக் கட்சியின் அனைத்து உறுப்பினர்களின் சம்பளத்தையும் கொரோனா நிதிக்கு நன்கொடையாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

சாட்ஜிபிடி உதவியால் 46 நாட்களில் 11 கிலோ எடை குறைத்த நபர் - என்ன உணவுகள் எடுத்து கொண்டார்? News Lankasri
