யாழ்–தமிழக கடற்போக்குவரத்து விரைவில் தொடக்கம்! வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்
யாழ்ப்பாணத்தில் கடவுச்சீட்டு அலுவலகம், குறிகாட்டுவன் இறங்குதுறை, காங்கேசன்துறை துறைமுகம் ஆகியவற்றின் அபிவிருத்தியுடன் காங்கேசன்துறை - தமிழக கடற் போக்குவரத்து சேவை ஆகியவை விரைவில் முன்னெடுக்கப்படும் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஜெயசேகரம் தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பொன்றில் இன்று(25) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அநுர அரசு
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
கடந்த அரசுகள் குறித்த முன்னெடுப்புக்களை முன்னெடுப்பதில் அசமந்தமாக இருந்தபோதும் இம்முறை அவற்றை அரசு நிறைவுசெய்யும்.
அது தொடர்பில் நான் அரசுடன் பேசியுள்ளேன். அதன் அடிபடையிலேயே இதை நான் கூறுகின்றேன். தீவக கடற்போக்குவரத்து இன்று பெரும் சவாலாக இருக்கின்றது.
வீதி அதிகார சபை செய்யவேண்டிய விடையத்தை அது கண்டுகொள்காதிருப்பதால் தான் பல அனர்த்தங்கள் நிகழ்ந்தேறியுள்ளன.
இவற்றை கருத்தில் கொண்டே அரசுடன் இந்த விடயம் குறித்து பேசி அதன் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



