பெக்கோ சமனின் மனைவிக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
பெக்கோ சமனின் மனைவி ஷாதிகா லக்ஷனியை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேக நபரின் பிணை மனு தொடர்பான உத்தரவு அன்றைய தினம் அறிவிக்கப்படும் என கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம அறிவித்தார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
“பெக்கோ சமனின்”மனைவியுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு சொந்தமான 13 வங்கி கணக்குகளை தற்காலிகமாக முடக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இந்தோனேசியா பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு
இந்தோனேசியாவில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் இந்தோனேசியா பொலிஸாரால் 7 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது கெஹெல்பத்தர பத்மே', 'கொமாண்டோ சலிந்த' , 'பாணந்துறை நிலங்க' மற்றும் “பெக்கோ சமனின்” மனைவி உள்ளிட்ட 6 பேர் அடங்கிய பாதாள உலக கும்பல் ஆகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட பாதாள உலக கும்பலில் இருந்த “பெக்கோ சமன்” என்பவரின் மனைவி ஆகஸ்ட் 29 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதையடுத்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டார்.
இவ்வாறு பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வந்த பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “பெக்கோ சமன்” என்பவரின் மனைவி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தபட்டதையடுத்து தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



