சட்டமா அதிபருக்கு அரசாங்கத்தால் அழுத்தம்: கம்மன்பில சாடல்
"அரசியல் பழிவாங்கலுக்காக அரசு நீதிக்கட்டமைப்பையும் பயன்படுத்துகின்றது என்றும், சட்டமா அதிபருக்கு அரசாங்கம் அழுத்தம் பிரயோகிப்பது தெளிவாக விளங்குகின்றது." எனவும் பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில(Udaya Gammanpila) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கம்மன்பில சாடல்
அவர் மேலும் தெரிவித்ததாவது,
"ஜனாதிபதி மற்றும் அரசின் மீதான மக்கள் நம்பிக்கை வெகுவாகச் சிதைவடைந்துள்ளது. அரசின் மீது மக்களின் வெறுப்பு தீவிரமடையும் போது மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்காகக் கடந்த அரசுடன் தொடர்புடைய விடயங்களை அரசு வெளியிடும்.
ஜனாதிபதி நிதியத்தில் இருந்து நிதி பெற்றவர்கள், மதுபானசாலை அனுமதிப் பத்திரம் பெற்றவர்கள் விவரத்தை அரசு வெளியிட்டது.
தற்போது 2022 மே கலவரத்தின் போது வீடுகளை இழந்த அரசியல்வாதிகள் பெற்றுக்கொண்ட இழப்பீட்டுத் தொகை தொடர்பான விபரங்களை அரசு வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி நிதியத்தில் இருந்து நிதி பெற்றவர்களின் பெயர் விவரங்களை வெளியிட்ட அரசு அந்த நிதியை மீளப் பெற்றுக்கொள்வதற்கு எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.
அதேபோல் கடந்த அரசில் மதுபானசாலை அனுமதிப் பத்திரங்கள் பெற்றுக்கொண்டவர்களின் பெயர் விவரங்கள் வெளியிடப்பட்டன. மதுபானசாலை அனுமதிப் பத்திரங்களை இரத்துச் செய்வதற்கு ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்படுமா எனக் கேள்வி எழுப்பிய போது அந்த மதுபானசாலை பத்திரங்கள் சட்ட ரீதியாக வழங்கப்பட்டுள்ளன.
அரசியல் பழிவாங்கல்
ஆகவே, அதற்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் சட்டச் சிக்கல் ஏற்படும் எனச் சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க குறிப்பிடுகின்றார்.
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayake) தேர்தல் பிரசார மேடைகளில் மதுபானசாலை அனுமதிப் பத்திரங்களையும், முன்னாள் ஜனாதிபதிகளுக்கான கொடுப்பனவை இரத்துச் செய்வதாகவும் குறிப்பிட்ட விடயங்கள் அனைத்தும் இன்று பொய்யாக்கப்பட்டுள்ளது.
மக்களைத் தூண்டிவிடுவதற்காகக் குறிப்பிட்ட விடயங்களைச் சட்டத்துக்கு முரணாகச் செயற்படுத்த முடியாது என்பதை அரசு தற்போது விளங்கிக்கொண்டுள்ளது.
அரசியல் பழிவாங்கலுக்காக அரசு நீதிக்கட்டமைப்பைப் பயன்படுத்திக் கொள்கின்றது. அரசியல் பழிவாங்கலை முன்னிலைப்படுத்தி வழக்குத் தாக்கல் செய்யப்படுகின்றன.
சட்டமா அதிபருக்கு அரசு அழுத்தம் பிரயோகிப்பது தெளிவாக விளங்குகிறது. எதிர்வரும் காலப்பகுதியில் பலர் கைதாகலாம்" என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
![தான் படிக்க வைத்த பெண்ணே தனக்கு அதிகாரியாக எஸ்ஐ சீருடையில் வந்து நின்றதால் இன்ப அதிர்ச்சியான காவலர்](https://cdn.ibcstack.com/article/e263aa7f-96be-4fdd-b622-39e30e84291e/25-67a6deb6b5243-sm.webp)
தான் படிக்க வைத்த பெண்ணே தனக்கு அதிகாரியாக எஸ்ஐ சீருடையில் வந்து நின்றதால் இன்ப அதிர்ச்சியான காவலர் News Lankasri
![UPSC தேர்வில் 5 முறை தோல்வியடைந்து 6-வது முயற்சியில் ஐஏஎஸ் அதிகாரியான பெண்.., யார் இவர்?](https://cdn.ibcstack.com/article/850f5751-af13-48d0-a452-7c3f77ee6692/25-67a6f9ece2bbb-sm.webp)