வீதிகளில் பயணித்தால் பணம் வசூலிக்க திட்டமிடும் அரசாங்கம்
நெடுஞ்சாலையை பயன்படுத்தும் மக்களிடம் இருந்து மாதாந்திர பணம் வசூலிக்க அரசாங்கம் ஆலோசித்து வருவதாக, அமைச்சரவை ஊடக பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் உள்ள நெடுஞ்சாலைகளை அரசாங்கம் பராமரிக்க முடியாததால், வீதி மேம்பாட்டு நிதியை உருவாக்கி, இவ்வாறு பணம் வசூலிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிதி அமைச்சின் தலையீட்டில் இது தொடர்பான கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
வரவு செலவுத் திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டதற்கமைய, உரிய நிதியத்தை நிறுவி அதற்கு அரசாங்கம் முதலில் நூறு மில்லியன் ரூபாவை பயன்படுத்துமெனவும் பந்துல குணவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பான நிதிக்காக மக்களிடம் இருந்து பணம் சேகரிக்கப்படும். அது எரிபொருளின் ஊடாகவேனும் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அணையா விடுதலைத்தீ சங்கரின் சாவு எப்படி வீரசரித்திரமானது.. 13 மணி நேரம் முன்
சரிகமப சீசன் 5 போட்டியாளர் சின்னு செந்தமிழனுக்கு இப்படியொரு வாய்ப்பா?... வேறலெவல் சர்ப்ரைஸ் Cineulagam
அவுஸ்திரேலியா அணிக்காக சதமடித்த முதல் இந்தியர்! 184 பந்துகளில் 163 ஓட்டங்கள்..சிட்னியில் ருத்ர தாண்டவம் News Lankasri