உதய கம்மன்பிலவை சிறையில் அடைக்க சதி செய்யும் அரசாங்கம்
2025, நவம்பர் 21 ஆம் திகதி ஒருங்கிணைந்த எதிர்க்கட்சியின் திட்டமிடப்பட்ட "நுகேகொட பேரணி"க்கு முன்னர் தன்னை சிறையில் அடைக்க அரசாங்கம் சதி செய்து வருவதாக முன்னாள் அமைச்சரும் பிவிதுரு ஹெல உறுமய தலைவருமான உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.
நேற்று(29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஊழல் குற்றச்சாட்டு
ஒரு அரசு சாரா அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவரால் லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையகத்தில் (CIABOC) தனக்கு எதிராக அண்மையில் முறைபாடு செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில் இந்த முறைபாடானது அரசியல் ரீதியாக உள்நோக்கம் கொண்டது என்றும், அதைப் பதிவு செய்ததாகக் கூறப்படும் அரசு சாரா நிறுவனத்திடம் செல்லுபடியாகும் பதிவு எண் கூட இல்லை என்றும் கம்மன்பில மேலும் குற்றம் சாட்டினார்.
இந்த நிலையில்,. தவறுகளைத் திருத்துவதற்குப் பதிலாக, உண்மையை வெளிப்படுத்துபவர்களை சிறையில் அடைக்க அரசாங்கம் முயற்சிக்கிறது என்றும் என்று முன்னாள் அமைச்சர் குற்றம் சாட்டினார், மேலும் சில அமைச்சர்கள் தனிப்பட்ட முறையில் அவரைக் கைது செய்ய வலியுறுத்துவதாகவும் கம்மன்பில இதன் போது தெரிவித்துள்ளார்.