ஒருநாள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள அரசாங்க மருந்தாளர் சங்கம்
அரசாங்க மருந்தாளர் சங்கம் மேற்கொண்டுள்ள ஒருநாள் பணிப்புறக்கணிப்பு காரணமாக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையிலும் நோயாளர்கள் அசெளகரியத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
குறித்த போராட்டமானது இன்று(05) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சிகிச்சைக்கு வந்த நோயாளர்கள்
பதவி உயர்வு முறை தொடர்பான பிரச்சினையை அனைவருக்கும் நியாயமாக தீர்க்கப்படாமை, பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கு பல்கலைக்கழக மானியக் குழுவின் தகுதிப் பட்டியலைப் பயன்படுத்த ஒப்புதல் வழங்கத் தவறியது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஒரு நாள் பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளனர்.
எனினும், இன்று மாதார்ந்த சிகிச்சை தினமாகையால் சிகிச்சைக்கு வந்த நோயாளர்கள்சிகிச்சை பெற்று மருந்து பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் அசெளகரியங்களை எதிர்நோக்கியமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 2 நாட்கள் முன்

இந்தியாவில் Audi A9 காரை வைத்துள்ள ஒரே பெண்! நீதா அம்பானியின் விலையுர்ந்த கார் கலெக்ஷன் இதோ News Lankasri
