அரசாங்க அதிகாரிகள் வெளிநாடு செல்ல தடை!
அரசாங்க அதிகாரிகள் அடிக்கடி வெளிநாடு செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன தெரிவித்துள்ளார்.
அதன் பிரகாரம், மிகவும் அவசரமான மற்றும் அத்தியாவசியமான சந்தர்ப்பங்களைத் தவிர, அரசாங்க ஊழியர்கள் தொடர்ந்து வெளிநாடு செல்ல அனுமதி வழங்க வேண்டாம் என்று அனைத்து நிறுவனத் தலைவர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
தடை உத்தரவு
சில நிறுவனத் தலைவர்கள் தங்களின் நெருங்கிய கூட்டாளிகளுக்கு மட்டுமே தொடர்ந்து வெளிநாட்டுப் பயண வாய்ப்புகளை வழங்கி வருவதாக அமைச்சருக்குத் தகவல் கிடைத்துள்ள நிலையைக் கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் தற்போதைய நிதி மற்றும் பொருளாதாரச் சூழலைக் கருத்தில் கொண்டு, அரசாங்க அதிகாரிகளின் வெளிநாட்டுப் பயணங்களைக் கட்டுப்படுத்துமாறு அரசாங்கம் முன்னதாக அறிவுறுத்தியிருந்தது.
ஈரான் போரில் அமெரிக்காவின் உண்மை நிலை... கசியவிட்ட அதிகாரிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை News Lankasri