இலங்கை தோல்வியடைய இனவாதமும் மதவாதமும் காரணம்! ஸ்ரீநேசன் சுட்டிக்காட்டு

Sri Lanka Economic Crisis Government Of Sri Lanka Sri Lankan Peoples
By Rakesh Oct 25, 2022 07:16 PM GMT
Report

இனவாதமும் மதவாதமும் இலங்கைத் திருநாட்டைத் தோல்வியடைய வைத்துள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.

“இன, மத வாதங்களால் வெற்றிபெற்ற ஆட்சியாளர்களும் தோற்கடிக்கப்பட்ட இலங்கைத் திருநாடும்” என்ற தலைப்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தேசிய ஒற்றுமை

இலங்கை தோல்வியடைய இனவாதமும் மதவாதமும் காரணம்! ஸ்ரீநேசன் சுட்டிக்காட்டு | Government Of Sri Lanka Economic Crisis

"அடிப்படை வாதங்களான இனவாதம், மதவாதம், நிறவாதம், குலவாதம், பிரதேசவாதம் என்பன பல்லின மக்களின் தேசிய ஒற்றுமைக்கு சவால்களாக அமைகின்றன.

அந்தவகையில் இலங்கையில் இனவாதம், மதவாதம் என்பவை கூர்மையான பிரிவினை ஆயுதங்களாக மாறி பல்லின மக்களின் தேசிய ஒற்றுமையைப் பிளவுபடுத்தி வந்துள்ளது.

அந்தவகையில் சிங்கள ஆட்சியாளர்கள் சிங்கள இன, பெளத்தமத அடிப்படை வாதத்தினை அரசியல் முதலீடாகப் பிரயோகித்து தேர்தலில் வெற்றிகளைக் குவித்து வந்துள்ளனர்.

பண்டாரநாயக்க, ஸ்ரீமா, ஜெயவர்தனா, மகிந்த, கோட்டாபய போன்ற அரசியல் தலைவர்கள், தேர்தல் சந்தைகளில் வெற்றிகொள்வதற்காக இனவாத மதவாதப் பேச்சுகள், செயல்களால் அரசியலை அனல்களாக மாற்றி தேர்தல்களில் வெற்றிக்கனியைப் பறித்துக் கொண்டனர்.

அதன் பின்னர் அதிகாரத்திமிர்களோடு நாட்டை ஆட்சி செய்து சுகபோகமாக வாழ்த்துள்ளனர்.

74 சதவீதமான சிங்கள மக்கள் 74 ஆண்டுகளாக இனமதவாதிகளுக்கு வெற்றிகளை வழங்கினர். ஆனால், வெற்றி பெற்ற தலைவர்கள், நாட்டுக்கும், மக்களுக்கும் படுதோல்விகளையே பெற்றுக்கொடுத்தனர்.

நாடு தோற்று வங்குரோத்து நிலையை அடைந்துள்ளது

இலங்கை தோல்வியடைய இனவாதமும் மதவாதமும் காரணம்! ஸ்ரீநேசன் சுட்டிக்காட்டு | Government Of Sri Lanka Economic Crisis

தேசிய ஐக்கியம், தேசிய பொருளாதாரம், ஒற்றையாட்சி முறை, பல்லின மத இணக்கப்பாடு, புத்திஜீவிகளின் பங்களிப்பு, செயற்பாடு குறைந்த கோட்பாட்டுக் கல்வி முறை, தொழில் வாய்ப்பு, புலம்பெயர்ந்த மக்களின் பங்களிப்பு, அரசியல் கட்சிகளின் அர்ப்பணிப்பு, தேசிய வளப்பயன்பாடு போன்ற அனைத்தும் தோல்வியடைந்ததால் நாடு தோற்று வங்குரோத்து நிலையை அடைந்துள்ளது.

நுகர்வுப் பணவீக்கம் 74 சதவீதமாகவும், உணவுப் பணவீக்கம் 94 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது. பொருட்களின் விலைவாசி தொடர்ந்தும் ஏறிக்கொண்டுள்ளது.

மக்களின் வருமானம் குறைந்த மட்டத்தில் உள்ளது. இதனால், மக்கள் பொருட்களைக் கொள்வனவு செய்ய முடியாமல் திண்டாடுகின்றனர்.

கடன்கள் கேட்டு மண்டாடுகின்றனர். நாடு மத்தியதர வருமானத்தில் இருந்து ஏழை நாடாக மாறியுள்ளதாக அமைச்சரவை பிரகடனம் செய்துள்ளது.

உலகளவில் பட்டினி வலய நாடாக இலங்கை அறிவிக்கப்பட்டுள்ளது. 97 இலட்சம் மக்கள் பட்டினியோடு வாழ்வதாக பொருளியல் கலாநிதியான எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார்.

நாட்டை விட்டு வெளியேறும் மக்கள்

இலங்கை தோல்வியடைய இனவாதமும் மதவாதமும் காரணம்! ஸ்ரீநேசன் சுட்டிக்காட்டு | Government Of Sri Lanka Economic Crisis

இந்த நாட்டில் வாழ முடியாத நிலையில் 7 இலட்சம் மக்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். எனவே, தேர்தல்களின் போது இனவாதிகள், மதவாதிகள், அடிப்படை வாதங்களால் வெல்லுகின்றனர். ஆனால், நாடும் மக்களும் தோல்வியுற்ற நிலையில், நாடு வங்குரோத்து நிலையில் உள்ளது.

வெற்றியடையும் அடிப்படைவாதிகள் பலர் அதிகார நாற்காலிகளில் இருந்து கொண்டு சுயவிருத்தி அரசியலில் ஈடுபடுகின்றனர். ஊழல், மோசடிகள், கையூட்டுகளுக்கு இங்கு தட்டுப்பாடுகள் இல்லை. ஆள்வோர்கள் செல்வத்தில் திழைக்கின்றனர்.

ஆளப்படும் பெரும்பான்மையான மக்கள் ஏழ்மை வறுமையில் மிதக்கின்றனர். உயரே பறக்கும் பட்டங்களாய் ஆட்சியாளர்கள் பளபளக்கின்றனர். பறக்க உதவும் நூல்களாய் ஏழ்மையில் மக்கள் அல்லலுறுகின்றனர்.

மொத்தத்தில் இனவாதமும் மதவாதமும் இலங்கைத் திருநாட்டைத் தோல்வியடைய வைத்துள்ளது. தொழிலாளர் வர்க்க, மத்தியதர வர்க்க மக்களை வறுமைக்குள் தள்ளியுள்ளது. இன, மத அடிப்படைவாதங்களால் அரசியலில் வெற்றிபெறும் ஆட்சியாளர்கள், ஊழல், மோசடிகளால் தமது பொருளாதாரத்தை வளம்படுத்திக்கொள்கின்றனர்"என்றுள்ளது.

மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், நீர்வேலி

15 Nov, 2026
மரண அறிவித்தல்

அச்செழு, Colindale, United Kingdom

14 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், யாழ்ப்பாணம், London, United Kingdom

20 Nov, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, கனடா, Canada

21 Nov, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அத்தாய், London, United Kingdom

29 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

20 Nov, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Trier, Germany

14 Nov, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், சாவகச்சேரி

13 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முரசுமோட்டை, London, United Kingdom

11 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை பள்ளம்புலம், காரைநகர், Toronto, Canada

18 Nov, 2024
நன்றி நவிலல்

காரைநகர் வலந்தலை, கந்தரோடை

19 Oct, 2026
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில்

19 Nov, 2009
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கத்தானை, ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம்

30 Nov, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சிட்னி, Australia

18 Nov, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, யாழ்ப்பாணம், வேப்பங்குளம்

18 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada, யாழ்ப்பாணம்

28 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, புரூணை, Brunei, London, United Kingdom

08 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம்

27 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், உருத்திரபுரம், திருநகர்

16 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, London, United Kingdom, கிளிநொச்சி

19 Nov, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Brampton, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பதுளை, கொழும்பு, Évry-Courcouronnes, France

09 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், ஈச்சமோட்டை, Pickering, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Hannover, Germany

10 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US