அரச தாதியர்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ள வேலை நிறுத்த போராட்டம்
அரச தாதியர் சங்கம் நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.
குறித்த போராட்டமானது இன்று (17) காலை 7.00 மணி முதல் நாளை(18) காலை 7.00 மணி வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார தொழிற்சங்கங்கள் பல முன்னெடுத்த அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் இன்று காலை 6.30 மணியளவில் தற்காலிகமாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், அரச தாதியர் சங்கம் இன்று பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
விசேட கலந்துரையாடல்
சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரணவுக்கும் நிதி இராஜாங்க செகான் சேமசிங்கவுக்கும் இடையில் நேற்று (16) இடம்பெற்ற கலந்துரையாடலில் எதிர்பார்த்த தீர்வு கிடைக்காத காரணத்தினால் இன்று அரச தாதியர்கள் போராட்டத்தில் ஈடுபட தீர்மானம் எடுக்கப்பட்டதாக தாதியர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் சுதத் ஜயசிறி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஒரு வாரத்திற்குள் கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்கப்படாவிடின் தொழிற்சங்க நடவடிக்கை மீண்டும் முன்னெடுக்கப்படும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம்
இந்நிலையில், அரச தாதிய உத்தியோகத்தர்கள் சங்கம் நாடு தழுவிய ரீதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தாதியர்களும் இன்று சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தாதிய சேவைக்கு பொருளாதார நிதியை பெற்றுக் கொடுங்கள் (DAT) என்ற கோரிக்கையை முன்வைத்து இந்த சுகயீன விடுமுறைப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
இதன்படி அவரச சேவை(Emergency service) தவிர்ந்த ஏனைய பிரிவுகளுக்கு தாதியர்கள் சேவைக்கு செல்லாமையால் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
செய்தி - கஜி
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan
அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
பணத்தை திருடி நிலாவிடம் கொடுத்த சோழன், வீட்டிற்கு தேடிவந்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் Cineulagam