அநுர அரசு குறித்த கடுமையாக சாடும் எதிர்க்கட்சி

Sajith Premadasa Government Of Sri Lanka Law and Order
By Rakesh Oct 30, 2026 05:49 PM GMT
Report

அரசால் முன்மொழியப்பட்டுள்ள புதிய சட்டமூலங்கள் ஊடாக 220 இலட்சம் மக்களின் ஜனநாயக உரிமைகளும் நிர்மூலமாக்கப்பட்டு, நாடு போல் பொட் பாணியிலான சர்வாதிகார ஆட்சியை நோக்கி நகர்த்தப்படுகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கடுமையாகக் குற்றம் சாட்டினார்.

அரசால் கொண்டுவரப்படவுள்ள அடக்குமுறைச் சட்டங்கள் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற தொழிற்சங்கங்களுடனான விசேட சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

சட்டமூலங்கள் 

சந்திப்பில் தொடர்ந்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, "பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களைத் தடுத்தல் ஆகிய இரண்டு சட்டமூலங்களும், ஒட்டுமொத்த நாட்டையும் ஒரேயொரு அரசியல் கட்சிக்கு அடிபணியச் செய்து 220 இலட்சம் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் வெட்கக்கேடான நடவடிக்கையாகும்.

அநுர அரசு குறித்த கடுமையாக சாடும் எதிர்க்கட்சி | Government Moving Towards Authoritarian Regime

கம்போடியாவின் கொடூர ஆட்சித் தலைவரான போல் பொட்டின் ஆட்சியை எமது நாட்டிலும் முன்னெடுப்பதற்காகவே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு இந்தச் சட்டமூலங்களைக் கொண்டு வருகின்றது.

இதற்கு முன்னர் துப்பாக்கிப் பிரயோகங்கள், தடியடிகள் மற்றும் கண்ணீர்ப்புகைப் பிரயோகங்கள் மூலம் முன்னெடுக்கப்பட்ட அடக்குமுறைகளை, இன்று சட்டப் புத்தகங்களுக்குள் உள்வாங்கிச் சட்டபூர்வமாக முன்னெடுக்கப் பார்க்கின்றனர்.

பிரதான எதிர்க்கட்சி என்ற வகையில் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க ஜனநாயக வழியிலும் மக்கள் பலத்துடனும் இதனைத் தோற்கடிப்போம்." என்றார்.

இலங்கையில் பெண்களை அச்சுறுத்தும் மார்பகப் புற்றுநோய்: மருத்துவ நிபுணரின் முக்கிய எச்சரிக்கைகள்

இலங்கையில் பெண்களை அச்சுறுத்தும் மார்பகப் புற்றுநோய்: மருத்துவ நிபுணரின் முக்கிய எச்சரிக்கைகள்

நீதிமன்றங்களின் அதிகாரங்கள்

புதிய சட்டமூலங்களின் ஆபத்துகள் குறித்து மேலும் விளக்கிய சஜித் பிரேமதாஸ, "இந்தச் சட்டங்களின் ஊடாகச் சுதந்திரமான நீதிமன்றங்களின் அதிகாரங்கள் கூடக் கேவலப்படுத்தப்படுகின்றன.

அநுர அரசு குறித்த கடுமையாக சாடும் எதிர்க்கட்சி | Government Moving Towards Authoritarian Regime

நீதிமன்றத்துக்குரிய அதிகாரங்களைப் பறித்து நிறைவேற்று அதிகாரத்திடம் ஒப்படைப்பதுடன், 'பயங்கரவாதி யார்' என்பதை வரைவிலக்கணப்படுத்தும் அதிகாரமும் நிறைவேற்று அதிகாரத்துக்கே வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அரசுக்கு எதிரான மாற்றுக்கருத்துடைய தரப்பினரைப் பயங்கரவாதிகளாக்கும் அச்சுறுத்தல் உருவாகியுள்ளது.

தேர்தல் காலத்தில் 'பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கிச் சர்வதேச ஜனநாயக நியமங்களுக்கு அமைவான சட்டமே கொண்டுவரப்படும்' எனக் கூறிய அநுர அரசு, இன்று பழைய சட்டத்தை விடப் பாரதூரமான அடக்குமுறைச் சட்டங்களை அறிமுகப்படுத்துகின்றது.

'வளமான நாடு - அழகான வாழ்க்கை' என வாக்குறுதியளித்த ஆட்சியாளர்கள், 220 இலட்சம் மக்களையும் நிர்கதியில் தள்ளிவிட்டுத் தங்களது நாடாளுமன்றத்தின் 159 உறுப்பினர்களுக்கும் மட்டுமே அழகான வாழ்க்கையை அமைத்துக் கொடுத்துள்ளனர்." என்று தெரிவித்தனர்.

மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினரின் பெயரை உள்ளடக்கிய படுகொலைப் பட்டியல்! வெளிவரும் முக்கிய தகவல்கள்

மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினரின் பெயரை உள்ளடக்கிய படுகொலைப் பட்டியல்! வெளிவரும் முக்கிய தகவல்கள்

நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வெள்ளவத்தை

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US