ஐ.எம்.எவ்வைத் திருப்திப்படுத்தக்கூடிய 'பட்ஜட்'டையே அரசு முன்வைக்கக்கூடும்! ஐக்கிய மக்கள் சக்தி சந்தேகம்
சர்வதேச நாணய நிதியத்தை திருப்திப்படுத்தக்கூடிய வரவு - செலவுத் திட்டத்தையே அரசு முன்வைக்கக்கூடும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்து.
தேசிய மக்கள் சக்தியின் 2ஆவது வரவு- செலவுத் திட்டம் எதிர்வரும் 7 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள நிலையிலேயே ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டினார்.
மாகாண சபைத் தேர்தல்
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

"மாகாண சபைத் தேர்தலை இலக்கு வைத்து வரி குறைப்பு செய்வதற்கு முன்னதாக அரசு திட்டமிட்டிருந்தது. எனினும், கூட்டுறவுத் தேர்தல்களில் தோல்வி ஏற்படுவதால் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசு அஞ்சுகின்றது.
எனவே, சர்வதேச நாணய நிதியத்தைத் திருப்திப்படுத்தும் பாதீடே முன்வைக்கப்படக்கூடும். அதேவேளை, மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு அரசுக்குச் சவால் விடுக்கின்றோம்" என குறிப்பிட்டுள்ளார்.