இணைய வழி வருமானம் மீதான வரி விதிப்பு அரசாங்கத்தின் பிழையான தீர்மானம்! வஜிர அபேவர்தன
இணையம் வழியாக இலங்கைக்கு நிதி பெற்றுத்தரும் இளைஞர்கள் மீதான வரி விதிப்பு அரசாங்கத்தின் பிழையான தீர்மானம் என வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இலங்கையின் இளைஞர், யுவதிகள் இணையத்தின் மூலம் நாட்டிற்கு வெளிநாட்டு நிதி பெற்றுத்தருகின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஓய்வூதியத் தொகை
எனினும், அவர்களுக்கு அரசாங்கத்தால் ஓய்வூதியத் தொகை அல்லது ஏனைய நலன்புரிகள் வழங்கப்படுவதில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
இத்தகவலை அவர், காலியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்றபின், ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு வெளிநாட்டு நிதி ஈட்டும் இளைஞர்கள் மீது வரி விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டால், அந்த வருமானத்தை வேறு வழிகளில் கையாள முடிவு செய்யக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.
முக்கியக் காரணம்
மேலும், எரிபொருள் நிலையங்களில் வழங்கப்படும் லாபத்தை நீக்க அரசாங்கம் எடுத்த முடிவின் முக்கியக் காரணம், அனுபவமற்ற நிர்வாகம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருபது ஆண்டுகளாக எரிபொருள் நிலையங்களில் பணியாற்றும் பணியாளர்கள், எரிபொருளின் மணம் காரணமாக உடல் நலக்குறைவுக்கு ஆளாகின்றனர் என தெரிவித்துள்ளார்.
இதை கருத்தில் கொண்டு அவர்களுக்கு கூடுதல் நன்மைகள் வழங்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
குழந்தையை கவனிக்கும் பொறுப்பை வாழ் நாள் முழுவதும் ஏற்க தயார்... மாதம்பட்டி ரங்கராஜ் கொடுத்த ஷாக் Manithan