அநுரகுமார தலைமையிலான அரசாங்கம் பாரபட்சமாக நடத்தாது: ஆளுநர் தெரிவிப்பு

Bandaranaike International Airport Jaffna Anura Kumara Dissanayaka New Zealand Northern Province of Sri Lanka
By Theepan Jan 28, 2025 11:27 AM GMT
Report

ஜனாதிபதி அநுரகுமார (Anura Kumara Dissanayaka) தலைமையிலான அரசாங்கம் மக்களை பாரபட்சமாக நடத்தாது என்று வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, இந்த அரசாங்கத்தின் காலத்தில் தமக்கான நீதியைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் வடக்கு மக்கள் நம்புகின்றனர் எனவும் ஆளுநர் கூறியுள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநருக்கும், நியூஸிலாந்துத் தூதுவர் தலைமையிலான குழுவினருக்கும் இடையில் இன்று  (28) ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சர்ச்சையில் சிக்கிய ரணில் கையொப்பமிட்ட கடிதம்! சிஐடி விசாரணைகள் ஆரம்பம்

சர்ச்சையில் சிக்கிய ரணில் கையொப்பமிட்ட கடிதம்! சிஐடி விசாரணைகள் ஆரம்பம்

பொருளாதார நெருக்கடி

இதன்போது, வடக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமைகள், பொருளாதார மேம்பாடு தொடர்பிலும் குறிப்பாக சுற்றுலாத்துறை தொடர்பிலும் வடக்கு மாகாண ஆளுநரிடம், தூதுவர் கேட்டறிந்து கொண்டார்.

பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடு தொடர்பாகவும் அதன் எதிர்கால அபிவிருத்தி தொடர்பாகவும் விரிவாக ஆளுநர் விளக்கமளித்தார்.

அநுரகுமார தலைமையிலான அரசாங்கம் பாரபட்சமாக நடத்தாது: ஆளுநர் தெரிவிப்பு | Government Led By Anura Kumara North Governor

அத்துடன் பயணிகள் கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட்டு நடைபெறுகின்றமையும் எதிர்காலத்தில் பொருட்கள் கப்பல் சேவை நடைபெறவுள்ளமையையும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

புலம்பெயர் தமிழர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கி வடக்கு மாகாணத்துக்கு வருவதற்காக போக்குவரத்துக்கு பெருமளவு நேரத்தை விரயமாக்கின்றனர் எனக் குறிப்பிட்ட ஆளுநர், கொழும்பிலிருந்து அநுராதபுரம் வரையிலாவது அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணிக்கப்படுவது அவசியம் எனவும் தெரிவித்தார்.

அதேவேளை கொழும்புக்கும், யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான உள்ளூர் விமான சேவைகளை அதிகரிப்பதற்கு கவனம் செலுத்துவது தொடர்பிலும், நியூஸிலாந்துத் தூதுவருக்குத் தெரியப்படுத்தினார்.

பொருளாதார நெருக்கடியின் தாக்கம் வடக்கு மாகாணத்தில் எவ்வாறு இருக்கின்றது என்பது தொடர்பில் நியூஸிலாந்துத் தூதுவர், ஆளுநரிடம் கேட்டறிந்து கொண்டார்.

முன்னாள் ஜனாதிபதிகளின் ஓய்வூதியங்களை இரத்து செய்ய முடியாது - வாதிடும் உதய கம்மன்பில

முன்னாள் ஜனாதிபதிகளின் ஓய்வூதியங்களை இரத்து செய்ய முடியாது - வாதிடும் உதய கம்மன்பில

வரவு – செலவுத் திட்டம்

விளிம்புநிலையில் உள்ள மக்கள் குறிப்பாக பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் இன்னமும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளன எனவும், ஒரு வேளை உணவுடன் அவர்கள் தமது அன்றாட உணவு உட்கொள்ளலை நிறுத்திக்கொள்கின்றனர் என்றும் ஆளுநர் குறிப்பிட்டார்.

அநுரகுமார தலைமையிலான அரசாங்கம் பாரபட்சமாக நடத்தாது: ஆளுநர் தெரிவிப்பு | Government Led By Anura Kumara North Governor

பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்கும் செயற்றிட்டம் முன்னெடுக்கப்படுகின்றது என்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அரசாங்கத்தால் அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் கீழ் உதவிகள் வழங்கப்படுகின்றன எனவும் ஆளுநர் தெரிவித்தார்.

இருப்பினும் தற்போதைய நடைமுறைகளின் கீழ் சரியான பயனாளிகளை இனம் காண்பதில் கள அலுவலர்கள் சிக்கல்களை எதிர்கொள்வதாகவும் சுட்டிக்காட்டிய ஆளுநர், நடைமுறைகளை மாற்றியமைப்பதன் மூலம் எதிர்காலத்தில் பயனாளிகளின் எண்ணிக்கையை குறைக்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.

பல்கலைக்கழக மாணவர்களுக்கு அரசாங்கத்தால் பல்வேறு கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றபோதும் தற்போதைய வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு மத்தியில் அவை போதுமானதாக இல்லை என்றும் ஆளுநர் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் வடக்கு மாகாண மக்களின் எதிர்பார்ப்பு எப்படி இருக்கின்றது என ஆளுநரிடம், தூதுவர் கேட்டறிந்து கொண்டார்.

ஐக்கிய தேசியக் கட்சிக்கும் சஜித் தரப்பினருக்கும் இடையே மீண்டும் கலந்துரையாடல்

ஐக்கிய தேசியக் கட்சிக்கும் சஜித் தரப்பினருக்கும் இடையே மீண்டும் கலந்துரையாடல்

சமய நல்லிணக்கம்

போருக்கு முன்னர் இங்கு பல தொழிற்சாலைகள் இயங்கியமையும், அதன் ஊடாகப் பலருக்கு வேலை வாய்ப்புக்கள் கிடைத்ததையும் சுட்டிக்காட்டிய ஆளுநர், அவை தற்போது இயங்காமையால் இங்குள்ள இளையோர் வேலை வாய்ப்பு இல்லாமல் சிரமப்படுவதையும் ஆளுநர் தூதுவருக்குத் தெரியப்படுத்தினார்.

அநுரகுமார தலைமையிலான அரசாங்கம் பாரபட்சமாக நடத்தாது: ஆளுநர் தெரிவிப்பு | Government Led By Anura Kumara North Governor

வடக்கில் அதிகரித்துள்ள உயிர்கொல்லி போதைப் பொருள் பாவனை மற்றும் அதனது தாக்கங்கள் தொடர்பிலும் நியூஸிலாந்துத் தூதுவர் கேட்டறிந்து கொண்டார்.

இளையோருக்கான பொழுதுபோக்கு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கவேண்டியதன் அவசியத்தையும் இதன்போது ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

மேலும் வடக்கு மாகாணத்தில் சமய நல்லிணக்கம் தொடர்பிலும் தூதுவர் ஆளுநரிடம் வினவினார். இதேவேளை, வடக்கு மக்களின் காணிகள் விடுவிக்கப்படவேண்டியதன் அவசியம், மீள்குடியேற்றம், உள்கட்டுமான அபிவிருத்தி தொடர்பிலும் ஆளுநர், தூதுக் குழுவினருக்கு விளக்கமாக எடுத்துரைத்தார்.

மாவையின் உடல் நிலை குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தி வெளியிட்ட முக்கிய தகவல்

மாவையின் உடல் நிலை குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தி வெளியிட்ட முக்கிய தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கரவெட்டி, உடுப்பிட்டி, Trichy, British Indian Ocean Terr.

06 Aug, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Bochum, Germany

01 Aug, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கனடா, Canada

05 Aug, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொண்டல்கட்டை, Brande, Denmark

17 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisiel, France

04 Aug, 2023
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கனடா, Canada

03 Aug, 2015
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, Toronto, Canada

01 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
மரண அறிவித்தல்

துன்னாலை கிழக்கு, London, United Kingdom

29 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US