அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு தொடர்பில் அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு
தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்பு நேர்காணல்களை நடத்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்காக டிசம்பர் 12, 2021 அன்று நடைபெற்ற போட்டி பரீட்சை முடிவுகளின்படி ஆங்கிலப் பாடம் தொடர்பான ஆட்சேர்ப்பு நேர்காணல் இடம்பெறவுள்ளது.
அதன்படி, மே 10, 11, 13 மற்றும் 20 ஆகிய திகதிகளில் நேர்முகத் தேர்வு நடைபெறும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
பெயர் பட்டியல் மற்றும் அழைப்பு கடிதம்
பொருளாதாரம் மற்றும் கல்வி அமைச்சின் வளாகத்தில் இந்த நேர்காணல்கள் இடம்பெறவுள்ளதாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்த நேர்காணலுக்கான தகுதியான விண்ணப்பதாரர்களின் பெயர் பட்டியல் மற்றும் அழைப்பு கடிதம் கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 3 நாட்கள் முன்

பாக்ஸ் ஆபிஸில் குறையும் DD Next Level படத்தின் வசூல்.. சந்தானத்திற்கு இப்படியொரு நிலைமையா Cineulagam

சிறந்த அப்பாவுக்கு உதாரணமாக திகழும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
