அதிரடி நடவடிக்கைகளுக்கு தயாராகும் கோட்டாபய அரசாங்கம்
தற்போதைய கோவிட் நிலைமைக்கு முகங்கொடுக்கும் எதிர்கால நடவடிக்கைகளை திட்டமிடுவதற்கான விசேட கூட்டம் இன்று சுகாதார அமைச்சில் நடைபெறவுள்ளது. அத்துடன் இலங்கை மக்களுக்கு கோவிட் தடுப்பூசிகள் இரண்டையும் வழங்குவதனை கட்டாயமாக்குவதற்கான சட்டத்தை முன்னெடுப்பதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தற்போது 11,928 கோவிட் தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, இலங்கையில் அடையாளம் காணப்பட்ட முதலாவது ஒமிக்ரோன் கோவிட் தொற்றாளருடன் நெருங்கி செயற்பட்டவர்களை பரிசோதனை செய்து அதற்கான அறிக்கை எதிர்வரும் 2 நாட்களுக்கு கிடைக்கவுள்ளதாக சுகாதார பணியகத்தின் இயக்குனர் வைத்தியர் ரஞ்ஜித் பட்டுவன்துடாவ தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலைமையின் கீழ் மேற்கொள்ள வேண்டிய மேலதிக திட்டங்களை நடைமுறைப்படுத்த விசேட கூட்டம் இன்று இரவு 7.30க்கு இடம்பெறவுள்ளது.
சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் தலைமையில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது. நாட்டை முழுமையாக மூடாமல் கோவிட் தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பில் இதன் போது கலந்துரையாடப்படவுள்ளது.
அத்துடன் இலங்கை மக்களுக்கு கோவிட் தடுப்பூசிகள் இரண்டையும் கட்டாயமாக்குவதற்கான சட்டத்தை அமுல்படுத்துவதற்கான நடவடிக்கை இதுவரையில் இடம்பெறவுள்ளதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 7 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
