தேர்தலுக்கு அரசாங்கம் தயார் இல்லை! செஹான் சேமசிங்க
எதிர்வரும் நவம்பர் மாதம் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான தீர்மானத்தை அரசு எடுக்கவில்லை. அதேவேளை, உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுதான் தீர்மானிக்க வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் தொடர்பில் ஊடகம் ஒன்றால் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அவர் வழங்கிய பதில்களும் வருமாறு:-
கேள்வி:- நவம்பர் மாதம் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறுமா?
பதில்:- அப்படியொரு தீர்மானத்தை நாம் எடுக்கவில்லை. அரசாங்கம் முன்னுரிமை கொடுப்பது பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்குத்தான். இதை நாம் வேகமாகச் செய்து முடிப்போம்.
ஜனாதிபதித் தேர்தல்
கேள்வி:- நவம்பரில் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறும் என்று இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி கூறியுள்ளாரே?
பதில்:- அதை அவரிடம்தான் கேட்க வேண்டும். அரசாங்கத்தைப் பொறுத்தவரை அப்படியொரு தீர்மானத்தை எடுக்கவில்லை.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தீர்மானம்
கேள்வி:- அப்படியாயின் உள்ளூராட்சி சபைத் தேர்தல் எப்போது நடைபெறும்?
பதில்:- அதைத் தேர்தல்கள் ஆணைக்குழுதான் தீர்மானிக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.
அரசியல்வாதிகள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மறைத்துவைத்துள்ள கோடிக்கணக்கான பணம் - எடுக்கப்பட்டுள்ள அதிரடி நடவடிக்கை
ஹோர்முஸ் நீரிணையில் செல்லும் கப்பல்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை - வீழ்த்தப்பட்ட 8 அமெரிக்க தளங்கள்
ஹரக் கட்டா பணம் வழங்கிய பட்டியலில் பெரும் புள்ளிகளின் பெயர்கள்! இலங்கை வரலாற்றில் பதிவாகவுள்ள பெரும் சம்பவம்
பஹ்ரைன் நாட்டின் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: மத்திய கிழக்கில் மீண்டும் அதிகரிக்கும் பதற்றம் News Lankasri