முதலீட்டாளர்களைப் பாதுகாப்பதற்கான முதலீட்டுப் பாதுகாப்பு மசோதா! அரசாங்கம் உத்தேசம்
நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த அந்நிய நேரடி முதலீட்டைக் கொண்டுவர வேண்டும் என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்று(29.05.2026) பிற்பகல் றம்புக்கணையிலிருந்து கலகெதர வரையிலான மத்திய அதிவேக சாலையின் மூன்றாம் பிரிவின் இரண்டாம் கட்ட கட்டுமானப் பணிகளின் அங்குரார்ப்பண நிகழ்வு நடைபெற்றுள்ளது.
அந்த நிகழ்வில், பிரதம அதிதியாகக் கலந்து கொண்டபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
டொலர் கையிருப்பு சிக்கல்கள்
அவர் தொடர்ந்தும் கருத்து குறிப்பிடுகையில்,
பிராந்தியங்களில் உருவாகி வரும் நெருக்கடிகளால் டொலர் கையிருப்பில் சிக்கல்கள் எழுவதாகவும், இதைச் சமாளிக்க ஒரு திட்டம் தேவை என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

நாட்டிற்கு அந்நிய நேரடி முதலீட்டைக் கொண்டுவருவது அவசியம் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இதற்கான தற்போதைய தடைகளை நீக்குவதில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகக் கூறியள்ளார்.
அதன் ஒரு கட்டமாக முதலீட்டாளர்களைப் பாதுகாப்பதற்கான முதலீட்டுப் பாதுகாப்பு மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், நாட்டின் ஏற்றுமதியில் 25 சதவீதம் அமெரிக்காவைச் சார்ந்து இருப்பதால், அந்த ஏற்றுமதிகளைப் பல நாடுகளுக்கும் பல்வகைப்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.