யாழில் அரச வீட்டு திட்டத்தை வழங்குவது தொடர்பான முக்கிய கலந்துரையாடல்
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மாதிரி கிராமங்களில் அமைக்கப்படவுள்ள 3800 வீடுகளுக்குமான நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான வேலைத் திட்டங்களை இரண்டு வருடங்களுக்குள் பூர்த்தி செய்ய முடியும் என வீடமைப்பு பிரதி அமைச்சர் ரி.வி சரத் தெரிவித்தார்.
அத்துடன் மின்சார வசதிகளை ஏற்படுத்தல், கிணறுகளை அமைத்து கொடுத்தல் உள்ளிட்ட வேலைத்திட்டங்கள் இதனுள் உள்ளடக்கப்பட உள்ளதாக பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.
போக்குவரத்து செலவினங்கள்
இதற்காக யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு 1259 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அத்துடன் நெடுந்தீவு உள்ளிட்ட தீவகங்களுக்கு வீடுகளுக்கு தேவையான கல் மணல் என்பவற்றை ஏற்றி செல்பவர் தொடர்பாகவும் அதில் ஏற்படும் போக்குவரத்து செலவினங்களை குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க உள்ளதாக நிகழ்வில் தலைமை தாங்கிய கடல் தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் மற்றும் பிரதேச செயலர்கள், வீடமைப்பு அதிகார சபையின் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








