சவால்களை எதிர்கொள்ள அரசிடம் திட்டங்கள் இல்லை: ஐக்கிய மக்கள் சக்தி கடும் விமர்சனம்
தற்போதைய அரசிடம் சவால்களை எதிர்கொள்வதற்குத் தேவையான தூரநோக்கு உள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயபால ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (13.3.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது அரசு ஆட்சிக்கு வந்து ஓராண்டுக்கும் மேலாகிவிட்டது. ஆட்சிக்கு வருவதற்கு முன்னர், மக்களின் பிரச்சினைகளுக்குக் குறுகிய காலத்திற்குள் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க முடியும் என்று இவர்கள் கூறினார்கள்.
ஆனால், நடைமுறையில் அவ்வாறான முன்னேற்றங்கள் எதுவும் ஏற்படுவதாகத் தெரியவில்லை.
தூரநோக்குப் பார்வை
தற்போதைய சூழலில் அரசுக்கு ஒரு தெளிவான தூரநோக்குப் பார்வை இருக்கின்றதா என்ற சந்தேகம் எமக்கு எழுந்துள்ளது.

ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சி என்ற ரீதியில், நாடு ஏதேனும் சவால்களை எதிர்கொள்ளும் தருணங்களில் அதனை முன்கூட்டியே கையாள்வதற்கான நடவடிக்கைகளை நாம் எடுத்துள்ளோம்.
நாட்டின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான எதிர்காலத் திட்டங்களை எதிர்க்கட்சித் தலைவரின் தலைமையில் நாம் முன்னெடுத்து வருகின்றோம் எனத் தெரிவித்துள்ளார்.
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 18 மணி நேரம் முன்
ஈரான் மீது திரும்பும் உலக நாடுகள் கவனம்: உக்ரைனுக்கு நல்லதல்ல: ஜெலென்ஸ்கி புதிய நகர்வு News Lankasri